தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 65வது திரைப்படமான பீஸ்ட் படத்தில் நடித்தார் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக இல்லாததால் கலவையான விமர்சனத்தை பெற்று சுமாரான வசூலை அள்ளியது இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் கை கோர்த்து தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின்படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது இந்த படத்தில் விஜய் உடன் கை கோர்த்தது ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர் என்ற தகவல் கிடைத்துள்ளது இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தில் ராஜூ என்பவர் தயாரித்து வருகிறார்.
தளபதி 66 திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் என அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த படமாக உருவாகும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை இப்படி இருக்கின்ற நிலையில் அண்மைகாலமாக விஜய் பற்றிய செய்திகள் இணையதள பக்கத்தில் பெரிய அளவில் பேசப்படுகின்றன.
அதுபோல இப்பொழுது நடிகரும் தயாரிப்பாளருமான கேஎஸ் ரவிக்குமார் அவர்கள் தளபதி விஜய் குறித்து பேசிய செய்தி இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது இது குறித்து பார்ப்போம். விஜய் மிகவும் வைராக்கியம் நிறைந்தவர். ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டால் அதை முடிக்காமல் விட மாட்டார்.
விஜயை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு இரண்டு முறை கிடைத்தது ஆனால் சில சந்தர்ப்பங்களில் அது நழுவி போனது எதிர்காலத்தில் வாய்ப்புகள் கிடைத்தால் ரெடியாக இருக்கிறேன் அப்படி இல்லை என்றாலும் பரவாயில்லை விஜயுடன் சேர்ந்து நடிக்க ரொம்ப ஆசையாக இருக்கிறேன் என கே எஸ் ரவிகுமார் கூறியுள்ளார்.