தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொள்வதற்கு நிறைய திரைப்படங்களை இயக்கி அதன் மூலம் மக்கள் மத்தியில் தலைதூக்கிய இயக்குனர்களில் ஒருவர்தான் ஏ.ஆர்.முருகதாஸ் இவரது இயக்கத்தில் வெளியான பல படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
அதே போல் இவர் தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் இயக்கிய திரைப்படங்களில் ஒன்றுதான் கஜினி சூர்யா நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து அசின்,நயன்தாரா என பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்த ஹிந்தி ரீமேக்கில் நடிகர் அமீர் கான் அவர்கள் கதாநாயகனாக நடித்திருப்பார் மேலும் இந்த திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெளியான பொழுது இதற்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தார்கள்.
இதனை தொடர்ந்து அமீர் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான லால் சிங் சத்தா படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறவில்லை இதனால் நடிகர் அமீர் கான் தனது அடுத்த அடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கு சற்று விலகி இருந்தார். இந்நிலையில் நடிகர் அமீர் கான் கஜினி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
எனவும் இந்த தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவர் இந்த இரண்டாம் பாகத்தில் நடித்தால் கண்டிப்பாக இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.