தமிழ் சினிமாவில் 90களில் வில்லன் நடிகராக ஒரு ரவுண்டு வந்தவர்தான் நடிகர் பப்லு பிருத்திவிராஜ். இவர் தற்போது 23 வயது உடைய பெண்ணை இரண்டாவது தாரமாக திருமணம் செய்ய போவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
சமூக வலைதளத்தில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் திருமணம் எந்த அளவிற்கு பேசப்பட்டு வந்ததோ அதைவிட அதிகமாக தற்போது பப்லு பிரித்திவிராஜன் திருமணம் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது நடிகர் பப்லு பிரித்திவிராஜ் அவர்கள் மலேசியாவை சேர்ந்த 23 வயது உடைய ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும் விரைவில் இவர்கள் திருமணம் செய்ய போவதாகவும் தகவல் ஆகி உள்ளது.
இது குறித்து பேசிய பப்லு பிருத்திவிராஜ் எனக்கு திருமணம் நடந்தால் உங்களிடம் கூறாமல் இருக்க மாட்டேன் அது மட்டுமல்லாமல் நான் அவரை திருமணம் செய்ய போவது உண்மைதான் என்று கூறியிருந்தார் இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் வயதான காலத்தில் உங்களுக்குப் பெண் சோக்கு கேக்குதா என்று கேள்வி எழுப்பப்பட்டது இதற்கு உடனே பிரித்விராஜ் ஆமா எனக்கு பெண் சோக்கு கேக்குது தான் என்று கரராக பேசியுள்ளார். இது மேலும் ஒரு சர்ச்சையாக கிளம்பி உள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் என்னுடைய முன்னாள் மனைவி கொடுக்காத அன்பு உற்சவம் சந்தோசம் மரியாதை அனைத்தையும் என்னுடைய காதலி எனக்கு கொடுத்திருக்கிறார் என்று தனது மனைவியின் அந்தரங்க விஷயத்தை ஓபன் ஆக கூறியுள்ளார் பப்லு பிரித்திவிராஜ்.
நான் காதலிக்கும் அந்த பெண்ணை விரைவில் திருமணம் செய்ய போகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுதான் தற்போது சினிமா வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் அவருடைய இரண்டாவது திருமணம் குறித்து எந்த ஒரு தகவலும் இன்னும் கூறாமல் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.