தீ பேமிலிமேன் 2 வெப்சீரிஸ்க்கு முற்றுப் புள்ளி வைக்க பார்க்கும் சீமான்.? இப்போ சமந்தா என்ன மாதிரியான பதிவு போட்டுயுள்ளார் பாத்திங்களா..

samantha
samantha

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா சமீபகாலமாக தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித், விஜய், ரஜினி போன்ற படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார் ஆனால் சமந்தா தெலுங்கு பக்கம் உள்ள சூப்பர் ஸ்டார் படங்களில் நடித்து வருகிறார்.

இப்படி ஆளுக்கு ஒரு திசையை பிடித்திருந்தாலும் அதிக வலுவுடன் இருப்பது என்னவோ நடிகை சமந்தா தான் என கூறப்படுகிறது அதற்கு காரணம் தமிழ்நாட்டு பெண்ணாக இருக்கிறார் மேலும் தற்போது தெலுங்கில் மருமகளாக அடி எடுத்து வைத்து வைத்துள்ளதால் இருபுறமும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.

இதனால் வெகு விரைவிலேயே தெனிந்திய சினிமாவில் நம்பர் 1 நடிகை என்ற அந்தஸ்தை சமந்தா பெறுவார் என கூறப்படுகிறது சினிமாவையும் தாண்டி தற்போது வெப்சீரிஸ் பக்கமும் தலை காட்டி நடித்து வருகிறார். அந்தவகையில் சமந்தா நடிப்பில் வெளியாகவுள்ள தீ பேமிலிமேன் 2 பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த தொடர் வருகின்ற ஜூன் மாதம் 4 தேதி வெளியாக இருக்கிறது இதனை முன்னிட்டு அந்த வெப்சீரிஸ்- ன் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்தது இது ஒரு பக்கமிருக்க அரசியல் பிரமுகர்கள் மட்டும் டிரெய்லர்  மிகப்பெரிய கோபத்திற்கு உள்ளாகியுள்ளது.

வெப்சீரிஸ் வெளியானால் மிகப்பெரிய கண்டனங்களை சந்திக்க நேரிடும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்தார். இவர் சொன்ன செய்தி காட்டுத் தீ போல பரவியதால் தற்போது அவருக்கு ஆதரவாக பலரும் இருக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் அமைதியாக இருங்கள் நம்பிக்கையுடன் இருங்கள் என பதில் கூறினார்.

நீங்கள் இந்த வெப்சீரிஸ் வெளியிட்டால் நீங்கள் சந்திக்க வேண்டிய விளைவுகள் இன்னும் அதிகமாக இருக்கும் என சீமான் கூறிய வண்ணமே இருக்கிறார்.