தென் இந்திய சினிமாவில் காதல் திருமணம் என்பது ஒரு சகஜமான விஷயம் தான் ஆனால் ஒரு சில பிரபலங்கள் கலப்பு திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வரும் நடிகர் மற்றும் நடிகைகள் யார் யார் என்று தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர்களில் இவரும் ஒருவர். நடிகர் விஜய் தனது ரசிகர்களில் ஒருவரான சங்கீதா சொர்ணலிங்கம் என்பவரை காதலித்து 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கிறிஸ்டின் மதத்தை சார்ந்த விஜய்யும் இந்து மதத்தை சேர்ந்த சங்கீதாவும் கலப்பு திருமணம் செய்து கொண்டனர்.
அஜித்:- தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித் குமார் இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அமர்க்களம் படம் மூலம் ஏற்பட்ட இந்த காதல் திருமணத்தில் தான் போய் முடிந்தது. ஹிந்து பிராமணரான அஜித்தும் கிறிஸ்டின் மதத்தை சேர்ந்த ஷாலினியும் 2000ம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி கலப்பு திருமணம் செய்து உள்ளனர்.
சூர்யா:- பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திலிருந்து கிட்டத்தட்ட ஏழு படங்களில் நடிகர் சூர்யாவும் ஜோதியாகவும் சேர்ந்து நடித்துள்ளனர். இதில் காக்க காக்க படப்பிடிப்பின் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பின்னர் இருதரப்பு குடும்பத்தினரின் சம்மதத்துடன் சூர்யாவிற்கும் ஜோதியாக இருக்கும் கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி திருமணம் முடிந்தது. நடிகர் சூர்யா தமிழ் இந்து மதத்தைச் சேர்ந்தவர், நடிகை ஜோதிகா பஞ்சாபி முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அசின்:- 80 மற்றும் 90களில் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தார் நடிகை அசின். இவர் மைக்ரோமேக்ஸ் கம்பெனி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ராகுல் சர்மாவை கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். அசின் ஒரு கிறிஸ்தவர் ராகுல் ஒரு இந்து இவர்கள் இருவரும் கலப்பு திருமணம் செய்து கொண்டனர்.
பிரியாமணி:- பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. இவர் முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஐபிஎல் கிரிக்கெட் களத்தில் இவர்கள் இருவரும் சந்தித்து உள்ளனர் அதன் பிறகு சிறிது காலம் டேட்டிங் செய்து வந்தனர். பின்னர் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நடிகை பிரியாமணி இந்து மதத்தைச் சேர்ந்தவர். முஸ்தபா ராஜ் ஒரு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் இவர்கள் இருவருக்கும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.