வயது வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்ட திரை பிரபலங்கள்.!

celebrities
celebrities

சினிமா பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கம் தான் ஆனால் ஒரு சில பிரபலங்கள் எந்த ஒரு வயது வித்தியாசத்தையும் பார்க்காமல் தன்னைவிட அதிக வயது உள்ள பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

பூர்ணிமா – இந்திரஜித்:- மலையாள சினிமாவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர்கள் தான்  பூர்ணிமா, இந்திரஜித் இவர் 2002 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி திருமணம் செய்து  பூர்ணிமாவை விட ஒரு வயது குறையவர்.

தனுஷ் – ஐஸ்வர்யா:- தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் நடிகர் தனுஷ் இவர் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தின் போது தனுசுக்கு 21 வயதும் ஐஸ்வர்யாவிற்கு 23 வயதும் ஆனது. இந்த தம்பதி 18 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

மகேஷ் பாபு – நம்பரதா :- தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் மகேஷ்பாபு. இவர் தன் மனைவியை விட இரண்டு வயது சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாஷ் – ராதிகா:- கன்னட சினிமாவிலிருந்து தற்போது பான் இந்திய நடிகராக  அவதாரம் எடுத்துள்ளார் இவர் தன் மனைவியான ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் யாஷ் ராதிகாவை விட இரண்டு வயது இளையவர்.

பிரியங்கா சோப்ரா –  நிக் ஜொனாஸ் :- பிரபல ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் நடிகரான நிக் ஜொனாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் பிரியங்கா சோப்ரா நிக் ஜொனாஷை விட பத்து வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷில்பா ஷெட்டி – ராஜ் குந்த்ரா :- ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவை ஒரு  நிகழ்ச்சியின் போது அவரைப் பார்த்து காதலிக்க தொடங்கி விட்டார் அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு இவர்களுடைய திருமணம் நடந்து முடிந்தது மேலும் நடிகை ஷில்பா ஷெட்டியை விட மூன்று மாதங்கள் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் :- ஹிந்தி திரையுலகில் பிரபலமான ஜோடிகள் என்றாலே அவர்கள் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பஜன் தான் இவர்கள் இருவரும் 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மேலும் நடிகை ஐஸ்வர்யா ராய் விட அபிஷேக் பச்சன் இரண்டு வயது இளையவர் ஆவார்.

சைப் அலி கான் – அமிர்தா சிங் :- ஹிந்தி நடிகர் சைப் அலிகான் கரீனா கபூரை திருமணம் செய்யும் முன் அமிர்தா சிங் என்பவரை திருமணம் செய்து உள்ளார். சைப் அலிகானை விட அமிர்தா சிங் 12 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கர் – அஞ்சலி:- இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் இவர் இந்திய அணியின் கிரிக்கெட் வீரராக இருந்தபோது பல சாதனைகளை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவருடைய மனைவியான அஞ்சலி சச்சின் டெண்டுல்கரை விட ஆறு வயது மூத்தவர் ஆவார்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன்:- தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார் அதன் பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர் . மேலும் நயன்தாராவை விட விக்னேஷ் சிவன் அவர்கள் ஒரு வயது இளையவர் ஆவார்.