2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட திரைப் பிரபலங்கள்..! இதுல நம்ம ஹீரோ கொஞ்சம் வித்தியாசம்தான்..!

marriage-1
marriage-1

பொதுவாக திரையில் பிரபலமாக இருக்கும் பல்வேறு பிரபலங்களும் ஒரு நேரத்தில் திருமணம் செய்து கொள்வது வழக்கம் தான் அந்த வகையில் இந்த ஆண்டு மற்றும் பல்வேறு பிரபலங்கள் திருமணம் செய்துள்ளார்கள்.அவர்களைப் பற்றி பார்க்கலாம் வாங்க.

நடிகை பிரணிதா இவர் தமிழ் சினிமாவில் அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தியுடன் சகுனி மற்றும் சூர்யாவுடன் மாஸ் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்த நமது நடிகை பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.இவ்வாறு இவர்களின் திருமணம் கடந்த மே மாதம் 30ஆம் தேதி நடைபெற்றுள்ளது.

பாலா தமிழ் சினிமாவில் அன்பு என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமானவர் தான் நடிகர் பாலா இயக்குனர் சிவாவின் தாய் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது அந்தவகையில் இவர் திருமணமாகி ஒன்பது வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில் சமீபத்தில் செப்டம்பர் மாதம் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

லிஜோமொள் ஜோஸ்  மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தது மட்டுமில்லாமல் இவர் தமிழில் சிவப்பு மஞ்சள் பச்சை மற்றும் தீதும் நன்றும் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தது மட்டுமில்லாமல் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் என்ற திரைப்படத்தில் கூட செங்கேணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் கடந்த அக்டோபர் மாதம் நான்காம் தேதி கேரளாவில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கார்த்திகேயா இவர் தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருவது மட்டும் இல்லாமல் பல்வேறு திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரட்டி உள்ளார் அந்த வகையில் சமீபத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை என்ற திரைப்படத்தில் கூட வில்லனாக கார்த்திக் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் கடந்த நவம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி ஹைதராபாத்தில் மிக பிரமாண்டமான திருமண மண்டபத்தில் அவருக்கு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.