11ஆம் வகுப்பு மாணவனும் ஆசிரியையும் ஒரே நாளில் ஓட்டம்.! அதிர்ச்சியில் பெற்றோர்கள்.. திடுக்கிடும் தகவல்

teacher
teacher

ஞானமலர் வயது நாற்பத்தி ஒன்று இவர் திருச்சி மாவட்டம் துறையூர் மதுராபுரி கிராமத்தை சேர்ந்தவர். இவரது மகன் 17 வயது துறையூரில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தான். வழக்கம் போல் பள்ளிக்கு சென்று அந்த மாணவன் வீடு திரும்பியுள்ளார் வீட்டுக்கு வந்ததும் பெற்றோர்களிடம் தான் விளையாட செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பினாள்.

வீட்டிலிருந்து கிளம்பிய மாணவன் நெடு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அதுமட்டுமில்லாமல் விளையாட சென்றதாகக் கூறிய மாணவனை அனைவரிடமும் விசாரித்தார்கள்  தெரிந்த அனைத்து இடங்களிலும் தேடினார்கள் ஆனால் மாணவன் கிடைக்கவில்லை. மாணவன் எங்கே சென்றான் என்ற தகவல் யாருக்குமே கிடைக்கவில்லை அவர்களின் நண்பர்களை விசாரிக்கும் போதுதான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதாவது மாணவன் படித்த அதே பள்ளியில் இருபத்தி ஆறு வயதான பள்ளி ஆசிரியை மாயமாகி இருந்தது தெரியவந்தது இதுதொடர்பாக நேற்று மாணவரின் பெற்றோர் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள். அந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர் அந்த விசாரணையில் மாணவன் படித்த பள்ளியில் போலீசார் விசாரணை நடத்திய போது அதே நாளில் அந்த ஆசிரியை  காணாமல் போனது தெரியவந்தது.

ஆசிரியை காணாமல் போனது குறித்து பள்ளியில் இருந்து யாரும் புகார் தெரிவிக்கவில்லை அந்த ஆசிரியை துறையூர் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் எம்ஏ பிஎட் படித்துவிட்டு கடந்த ஆறு ஆண்டுகளாக பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது மாணவரும் ஆசிரியரும் ஒரே நாளில் மாயமாகி இருப்பதால் சமூகவலைதளத்தில் இருவரும் ஒன்றாக சேர்ந்து ஓடி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இருந்தாலும் போலீஸ் மிகவும் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளதால் விரைவில் மாணவன் எங்கே இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்கப்படும் என தெரியவருகிறது.