சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் வீஜே மணிமேகலை. இவர் இந்த நிகழ்ச்சியில் பணியாற்றும்போதே உசைன் என்னும் நடன கலைஞரை காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்பு இவர்கள் திருமணம் செய்துகொண்ட சில நாட்களிலே விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ்.
சின்னத்திரை சீசன் 1 நிகழ்ச்சியில் இருவரும் இணைந்து கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் இறுதியில் சிறப்பாக விளையாடி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர். பின்பு தற்போது மணிமேகலை தொடர்ந்து சில வருடங்களாக விஜய் தொலைக்காட்சியிலே பணியாற்றி வருகிறார். மணிமேகலை கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை ரக்ஷனுடன் இணைந்து தொகுத்து வழங்கி வந்தார்.
மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற காமெடி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியின் மூலம் மணிமேகலை பல்வேறு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். குக் வித் கோமாளி முதல் மற்றும் இரண்டாவது சீசனிலும் கலந்துகொண்ட மணிமேகலை தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசனிலும் பங்கேற்றுள்ளார்.
மேலும் மணிமேகலை அவரது கணவர் உசைனுடன் இணைந்து யூட்யூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார். அதில் செம ஃபன் வீடியோஸ் எல்லாம் வெளியிட்டு பல ரசிகர்களை தக்க வைத்துள்ளார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மணிமேகலை அவரது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.
அந்த வகையில் தற்போது மணிமேகலை அவரது பள்ளி பருவ புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். மேலும் அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் மணிமேகலை அப்பவே க்யூட்டாக இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.