வன்முறைக்கு பஞ்சமே இல்லாத காட்சிகள் : OTT தளத்தில் வெளிவரும் சாணி காயிதம்.! எப்போது தெரியுமா.?

saani kayitham
saani kayitham

நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து இப்போது வரையிலும் சிறப்பான கதைகளில் மட்டுமே நடித்துள்ளார். ஒரு சில படங்களில் வெற்றியை ருசிக்க வில்லை என்றாலும் அந்த படத்தில் இவரது கதாபாத்திரம் சிறப்பான வகையில் தான் இருந்து வந்துள்ளது.

இப்பொழுது தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக இவர் விஸ்வரூபம் எடுத்துள்ளாராம் அதிலும் குறிப்பாக தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். ஹீரோயின்னாக அறிமுகமாகி டாப் நடிகர்கள் படங்களில் நடித்து வந்த இவர் தற்போது சோலோ படங்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

இது அவருக்கு நல்ல வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளன இப்பொழுது  இவர் இயக்குனர் செல்வராகவன் இணைந்து சாணி காயிதம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இருந்து வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வேற லெவல் இருந்ததால் இந்த திரைப்படம் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் எப்போது வெளிவரும் என  காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த திரைப்படம் முழுக்க முழுக்க வன்முறை காட்சிகள் அதிகம் என்பதால் திரையரங்கில் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது சொல்லப்போனால்  அண்மையில் வெளியான ராக்கி திரைப்படம் வன்முறையை அதிகம் இருக்கும் திரைப்படம்.

ஆனால் சாணி  காயிதம் திரைப்படம் அதைவிட அதிக வன்முறையை இருக்கும் திரைப்படமாம். அந்த காரணத்தினால் படம் அமேசான் OTT தளத்தில் வெளியாக இருக்கிறது இந்த திரைப்படம் சரியாக ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரியவந்துள்ளது.