வாலி படத்தில் நடித்துள்ள மாரிமுத்து எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! அட இந்த மூன்று பிரபலமுமே இப்போ உயிரோட இல்லையே…

VAALEE
VAALEE

G. Marimuthu: தமிழ் சினிமாவிற்கு உதவி இயக்குனராக அறிமுகமாகி இயக்குனராகவும், நடிகராகவும், சீரியல் நடிகராகவும் கலக்கி வந்த மாரிமுத்து நேற்று மரணம் அடைந்திருக்கும் நிலையில் இந்த தகவல் திரையுலகினார்கள், ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மாரிமுத்து எஸ்.ஜே சூர்யா, மணிரத்தினம், வசந்த் உள்ளிட்ட பல இயக்குனர்களுடன் இணைந்த உதவியக்குனராக பணியாற்றியுள்ளார். பிறகு கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கினார். இந்தப் படங்கள் இரண்டுமே எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியினை தரவில்லை.

எனவே இயக்குவதை விட்டுவிட்டு நடிப்பதில் ஆர்வம் காண்பித்தார். அப்படி மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் படத்தில் இவருடைய கேரக்டர் பாராட்டப்பட்டது. இந்த படத்தை தொடர்ந்து மொத்தம் மாரிமுத்து 20 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த சூழலில் தான் இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. வில்லனாக இருந்ததால் 200 எபிசோடுகளாக குணசேகரன் கேரக்டரை திட்டி தீர்த்து வந்த ரசிகர்கள் தற்பொழுது ஹீரோவாக ஏற்றுக் கொண்டது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனராகவும், நடிகராகவும் இருந்த பொழுது கிடைக்காத புகழை எதிர்நீச்சல் பெற்று தந்தது. இவ்வாறு இதன் மூலம் தனக்கான சாம்ராஜ்ஜியத்தை ரசிகர்கள் மத்தியில் உருவாகி இருக்கும் மாரிமுத்து ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கமலஹாசன் இந்தியன் 2, சூர்யாவின் கங்குவா போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இந்த சூழலில் மாரிமுத்துவின் மரணம் ரசிகர்களை பெரிதளவிலும் அதிர்ச்சடைய வைத்திருக்கும் நிலையில் ரசிகர்கள் தொடர்ந்து மாரிமுத்து குறித்த தகவலை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகின்றனர். அப்படி தற்பொழுது  விவேக், மாரிமுத்து இணைந்து வாலி படத்தில் நடித்த படக்  சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.