பாலிவுட்டில் சினிமாவில் பல்வேறு டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தனது திறமையை வெளி காட்டிய தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து பின் ஒரு கட்டத்தில் கிளாமரை காட்டி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் நடிகை காஜல்.
முதலில் நடிகர் ஷாருக் கானுடன் இணைந்து இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது அதனைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் பல்வேறு நடிகர்களுடனும், தனியாகவும் நடித்து அசத்தினார். நடிகை காஜோல் தமிழிலும் ஓரிரு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அந்த வகையில் முதலில் அரவிந்த்சாமி, பிரபுதேவா ஆகியோருடன் இணைந்து மின்சார கனவு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது அதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷுடன் கைகோர்த்து வேலையில்லா பட்டதாரி 2-ம் பாகத்தில் வில்லியாக நடித்திருந்தார்.
அதன் பிறகு அவர் தமிழில் நடிக்கவில்லை என்றாலும் அவருக்கு ரசிகர்கள் பட்டாலும் உருவானது. தற்போது நடிகை கஜோல் பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை. என்றாலும் சமூக வலைதளப் பக்கங்களில் இன்ஸ்டா மற்றும் டுவிட்டர் பக்கத்தில் பதிவு மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.
சினிமா வாழ்க்கையில் வெற்றி கண்ட கஜோல் 1999 ஆம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் தற்போது ஒரு மகள் இருக்கின்றனர் இந்த நிலையில் நடிகை காஜல் மும்பையில் உள்ள ஜுஹூ பகுதியில் இரண்டு அப்பார்ட்மெண்ட் களை வாங்கி உள்ளார் அந்த இரண்டு அப்பார்ட்மெண்ட் வீடுகள் மட்டுமே சுமார் 11.95 கோடி என கூறப்படுகிறது.