சினிமா உலகிற்கு 2015 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமா மூலம் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. இவர் 2016 ஆம் ஆண்டு பாலிவுட் திரைப்படத்தில் கால் தடம் பதித்தார். அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு ஏ எல் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய வனமகன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார் இந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் தம்பி ராமையா வருண் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இந்தத் திரைப்படம் உருவாகியது. தான் நடித்த முதல் திரைப்படமே ரசிகர்களிடம் சாயிஷா மிகவும் பிரபலம் அடைந்து விட்டார் அதனை தொடர்ந்து கடைக்குட்டி, சிங்கம் ஜிங்கா, கஜினிகாந்த், காப்பான், டெடி என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் 2018 ஆம் ஆண்டு ஆர்யாவுடன் இணைந்து நடித்த கஜினிகாந்த் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது ஆர்யா மீது சாயிஷாவுக்கு காதல் ஏற்பட்டது.
இந்த திரைப்படத்திற்கு பிறகு இருவரும் ஒன்றாக காதலிக்க ஆரம்பித்தார்கள் பின்பு 2019 ஆம் ஆண்டு இவர்கள் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள் இவர்களின் திருமண விழாவில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள். இந்த தம்பதிக்கு குழந்தை பிறந்தது திருமணத்திற்கு பிறகு சாயிஷா பெரிதாக படங்களில் நடிக்கவில்லை தான் உண்டு தான் வேலை உண்டு என குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
ஆனால் அடிக்கடி பண்டிகை நாட்களில் தன்னுடைய கணவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதள பக்கமான instagram பக்கத்தில் அடிக்கடி வெளியிட்டு வருவார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆர்யா மற்றும் சாய்ஷா இருவரையும் வாழ்த்தி வருவார்கள். அதேபோல் சமூக வலைதளத்தில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் சாயிஷா நீண்ட காலமாக புகைப்படம் எதுவும் பதிவிடாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் திடீரென ஒரு புகைப்படத்தை சமூக வலைதள பக்கம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் முகம் சுளித்துள்ளார்கள் ஏனென்றால் குழந்தை பிறந்த பிறகும் இப்படி ஒரு புகைப்படம் தேவையா எனவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இதை ஆர்யா பார்த்தால் உங்களுக்கு தேவையில்லாத சண்டை தான் வரும் எனவும் அறிவுரை கூறி வருகிறார்கள்.
இதோ அவர் வெளியிட்டுள்ள புகைப்படம்.