Sayyeshaa : நடிகை சாய்ஷா தனக்கு இரண்டு வயதாக இருக்கும் பொழுது தனக்கு வாங்கிய பிறந்தநாள் கிப்டை தற்பொழுது சாயிஷாவின் மகளின் இரண்டாவது பிறந்தநாளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என நடிகை சாயிஷா கூறியுள்ளார்.
சினிமாவில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் ஒன்றாக நடித்துவிட்டு காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள் அந்த வகையில் பல நட்சத்திரங்களை நாம் கூறிக் கொண்டே செல்லலாம் அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் ஆர்யா மற்றும் சாயிஷா.
ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் கஜினிகாந்த் என்ற திரைப்படத்தின் மூலம் ஒன்றாக நடிக்க ஆரம்பித்தார்கள். தாங்கள் நடித்த முதல் திரைப்படத்திலேயே இருவருக்கும் காதல் மலர்ந்தது அதனால் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2019 ஆம் ஆண்டு கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார்கள் இந்த திருமணத்தில் பல நட்சத்திரங்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டார்கள்.
ஆர்யா மற்றும் சாயிஷா தம்பதிகளுக்கு வயது வித்தியாசம் 17 என்பதால் பலரும் விமர்சனம் செய்தார்கள் இதையெல்லாம் கடந்து போகும் வகையில் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள் இந்த நிலையில் இந்த இரண்டு தம்பதிகளுக்கும் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது அதற்கு முதல் பிறந்த நாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடினார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் அவரின் இரண்டாவது பிறந்தநாள் வீட்டிலேயே மிகவும் கோலாகலமாக கொண்டாடி உள்ளார்கள் அதனை தன்னுடைய சமூக வலைதளப் பக்கமான youtube பக்கத்திலும் வீடியோவாக பதிவிட்டுள்ளார் அந்த வீடியோவில் இரண்டு என்ற எண்ணில் வடிவமைக்கப்பட்டுள்ள மெழுகுவர்த்தியை எடுத்துக்காட்டி இந்த மெழுகுவர்த்தி தன்னுடைய இரண்டாவது பிறந்த நாளின் பொழுது தன்னுடைய தாயார் வாங்கி தந்ததாகவும் 24 வருடங்கள் பத்திரமாக பாதுகாத்து தன்னுடைய மகளின் இரண்டாவது பிறந்த நாளில் பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சாயிஷா தன்னுடைய மகளின் பிறந்தநாளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.