நடிகை சாய்ஷா திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் ஐட்டம் பாடலில் நடனமாடி இருக்கும் நிலையில் இது குறித்து பலரும் விமர்சனம் செய்து வந்தனர் எனவே தற்பொழுது இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார் அது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 2017ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த வணங்கான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமான சாயிஷா இந்த படத்தினை தொடர்ந்து கார்த்தி உடன் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் தான் இவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது மேலும் இதனை அடுத்து விஜய் சேதுபதிவுடன் ஜூங்கா, ஆர்யாவுடன் கஜினிகாந்த் போன்ற படங்களில் நடித்துள்ளார். கஜினிகாந்த் படம் தெலுங்கில் பலே பலே மகடிவோயின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தில் இணைந்து நடிக்கும் பொழுது ஆரியா சாயிஷாவுக்கு இடையே காதல் மலர்ந்தது.
38 வயது ஆர்யாவை 21 வயதுடைய சாயிஷா குடும்பத்தினர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். மேலும் நடிகை சாய்ஷா ஜூலை மாதம் பெண் குழந்தையை பெற்றெடுத்தார் தான் கர்ப்பமாக இருப்பதை சாயிஷா கூறாத நிலையில் குழந்தை பிறக்கும் சில வாரத்திற்கு முன்புதான் அறிவித்தார். இந்நிலையில் கடைசியாக சாயிஷா தெலுங்கு திரைப்படம் ஒன்று நடித்திருந்த நிலையில் பிறகு பெரிதாக நடிப்பில் ஆர்வம் செலுத்தாமல் இருந்து வந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் பத்து தல படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார். அதாவது பத்து தல படத்தில் சிம்பு கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், பிரியா பவானி சங்கர், அனுசித்ரா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அதில் பத்து தல படத்ததின் அடாவடி பாடலில் நடிகை சாயிஷா கவர்ச்சியான நடனமாடி இருக்கிறார் என தெரியவந்துள்ளது. எனவே இரண்டு வருடங்களுக்குப் பிறகு ரீ என்ட்ரி கொடுக்கும் பொழுது இந்த ஒரு கவர்ச்சி நடனம் தேவைதானா என பலரும் விமர்சனம் செய்து வந்த நிலையில் தற்போது அதற்கு பதில் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், நான் மீண்டும் வந்து விட்டேன் எனக்கு மிகவும் பிடித்ததை செய்வதற்கு, அது நடனம் தான் பத்து தல படத்தில் உள்ள இந்த அற்புதமான பாடலை ஏ.ஆர் ரகுமான் பிரமாதமாக இசையமைத்து இருக்கிறார். பத்து தல படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது இந்த படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன் என பதிவிட்டு அதனுடன் அடாவடி பாடலின் போஸ்டரையும் பதிவு செய்திருக்கிறார்.