தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருவர் தனுஷ். இவர்மற்ற நடிகர்கள் போல் பெரிய அளவு பந்தா காட்டாமல் சைலண்டாக ஒரு பக்கம் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ஓடி கொண்டிருக்கிறார். தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்கள்..
மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தன அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் வாத்தி, கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்து வருகிறார் இதில் முதலாவது வாத்தி திரைப்படம் கோலாகலமாக வெளிவர இருக்கிறது இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான படமாக உருவாகி இருக்கிறதாம்.
இந்தத் திரைப்படத்தை வெங்கி அட்லுரி இயக்கி உள்ளார். தனுஷ்க்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார் மற்றும் tanikella bharani, சாய்குமார், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், ஷா ரா, இளவரசு, நார சீனிவாஸ் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் வாத்தி படக்குழு நேற்று இசை வெளியீட்டு விழாவை மிகப் பெரிய தனியார் கல்லூரியில் நடத்தியது இதில் தனுஷ் அவரது மகன்கள் மற்றும் படத்தில் நடித்த பல முன்னணி நடிகர், நடிகைகல் கலந்து கொண்டனர் அப்பொழுது பேசிய தனுஷ் வாத்தி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது குறித்து பேசினார்..
கொரோனா லாக் டவுன் நேரத்தில் தான் வெங்கி அட்லுரி இந்த கதையை கூறினாராம் அந்த நேரத்தில் நான் வேலையே இல்லாமல் மன உளைச்சலில் இருந்தேன் கதை கேட்டு விட்டு வேண்டாம் என ஏதாவது காரணம் சொல்லலாம் என காத்திருந்தேன் ஆனால் கதை எனக்கு ரொம்ப பிடித்து விட்டதால் உடனே ஓகே சொல்லி விட்டேன் ஆனால் தனுஷ் கூறினார்.