ரஜினியின் மானத்தை காப்பாத்துங்க..! பிரபல நடிகருக்கு வேண்டுகோள் விடுத்த ரசிகர்கள்..!

rajini-lawrance

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் என்றால் அது சந்திரமுகி திரைப்படம் தான் அந்த வகையில் இந்த திரைப்படம் 2005 ஆம் ஆண்டு பி வாசு அவர்களுடைய இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ரஜினிகாந்த் நடித்தது மட்டும் இல்லாமல் நயன்தாரா ஜோதிகா வடிவேலு பிரபு நாசர் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்த இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் எடுக்க போவதாக அண்மையில் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தை தற்சமயம் லைக்கா நிறுவனம் தயாரிப்பது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் சூட்டிங் நேற்று மைசூரில் மிக பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இவ்வாறு சூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே லாரன்ஸ் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் செய்த பின்னே வேலையை தொடங்கியுள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தின் சூட்டிங் ஆனது மைசூரில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இதில் வடிவேலு லாரன்ஸ் மற்றும் பல நடிகர்கள் கலந்து கொண்டார்கள். பொதுவாக இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தில் ரஜினி மற்றும் வடிவேலு கூட்டணி மிக பிரமாண்டமாக இருக்கும் அந்த வகையில் இவர்கள் நடித்த காமெடி காட்சிகள் இன்றும் ரசிகர்கள்  கொண்டாடி வருகிறது.

ஆனால் லாரன்ஸ் மற்றும் வடிவேலு கூட்டணியில்  சமீபத்தில் வெளியான சிவலிங்கா திரைப்படம்  மாபெரும் தோல்வியை சந்தித்தது. ஆனால் தற்பொழுது சந்திரமுகி திரைப்படத்தில் இந்த கதாபாத்திரங்கள் ஒன்றிணியும் வகையில் இந்த திரைப்படம் எப்படியாவது வெற்றி கொடுத்து விட வேண்டும் என லாரன்ஸ் ஒரு முடிவோடு இருக்கிறாராம் அது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் பலரும் தலைவர் மானத்தை காப்பாற்றுங்கள் என வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.

lawrance
lawrance