Actor Sathyaraj: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சத்யராஜ் ஹீரோவாக நடித்து வந்த நிலையில் சமீப காலங்களாக தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இவருடைய மகள் மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு வழங்கும் பணியில் ஈடுபட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்படுகிறது.
சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் மறுவாழ்வு பணியில் ஈடுபடுவதில் ஆர்வம் உடையவர். அப்படி இலங்கை போரின் பொழுது பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ்ப்பாணம் பகுதிக்கு சென்று நிவாரண பணிகளில் ஈடுபட்டுகிறதார். அதேபோல் தற்பொழுது மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு வழங்கும் பணியில் சமீப காலங்களாக ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் மணிப்பூரில் தற்பொழுது மிகவும் பணம் நெருக்கடி இருந்து வருவதனால் ஏராளமான குடும்பங்கள் இடம்பெயர்வதற்கு இடம் இல்லாமல் தொடர்ந்து சமூக பிரச்சனைகளும் இருந்து வருகிறது. எனவே மணிப்பூரில் இருப்பவர்களுக்கு உதவ பலரும் முயற்சி செய்து வருகின்றனர். அப்படி மணிப்பூரில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான யா- அலின் நிறுவனம் சர்வதேச அளவில் பாராட்டப்பட்டது.
இதனுடைய நிறுவனர் மனித உரிமை பாதுகாப்பாளரான சதாம் மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிக்காக வாதிட்டு மாற்றத்தின் முன்னிலையில் இருந்து வருகிறது. அவருடன் இணைந்து மணிப்பூரில் இடம் பெயர்ந்த மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என நிதி திரட்டும் பிரச்சாரங்களும் மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு இந்த பிரச்சாரம் மேற்கொள்வதற்கு முக்கிய காரணம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உணவு, தங்கும் இடம், உடை மற்றும் மிகவும் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதை இதன் நோக்கமாக அமைந்திருக்கிறது. அப்படி இந்த மாதம் இவர்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் பங்களித்துள்ளேன் வரும் மாதங்களில் மேலும் வழங்க உள்ளேன் மணிப்பூரில் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த அனைவரும் கைகோர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தியன் நன்கொடையாளர்களுக்கு வரி விளக்குகள் கிடைக்கும் இந்த முக்கியமான முயற்சிக்கு ஆதரவளிக்க அனைத்து தரப்பினர்களையும் வேண்டுகிறோம் என்று திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.