இந்தியன் 2 படத்தில் நடிக்க ஓகே சொன்ன சத்யராஜ் – போட்ட கண்டிஷனை பார்த்து ஆட்டம் கண்டு போயிருக்கும் படக்குழு..!

indian-2-
indian-2-

உலக நாயகன் கமலஹாசன் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஷங்கருடன் கைகோர்த்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டிருந்தாலும் தொடர்ந்து பல அசம்பாவிதங்கள் ஏற்பட்டதால் அப்பொழுது படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது அதன் பிறகு இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படாமல் பல வருடங்கள் இழுப்பறியில் இருந்தது.

ஒரு வழியாக தற்போது பல பிரச்சனைகளை தாண்டி ஷூட்டிங் நடைபெற்று வருகிறது இந்த படத்தில் கமலுடன் கைகோர்த்து காஜல் அகர்வால், ரகுல் ப்ரித் சிங், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், சித்தார்த், பாபி சிம்ஹா, யோகி பாபு, ஆடுகளம் நரேன் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர். அண்மையில் கூட யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ்.

இந்த படத்தில் கமிட் ஆகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் இந்தப் படத்தில் சத்யராஜை நடிக்க வைக்க முதலில் சங்கர் பேச்சு வார்த்தை நடத்தினார் ஆனால் படத்தின் கதையை கேட்டுவிட்டு அவர் அப்பொழுது மறுத்துவிட்டார் காரணம் இந்த படத்தில் சத்யராஜிக்கு ஒரு பயங்கரமான வில்லன் கதாபாத்திரமாம்..

இதில் நடித்தால் இது போன்ற வாய்ப்புகளே பிறகு அதிகம் வரும் இதனால் தனது கேரியருக்கு பாதிப்பு ஏற்படும் என கருதினார் ஆனால் தொடர்ந்து சங்கர் கேட்டுக் கொண்டதால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் ஆனால் அதேசமயம் ஒரு கண்டிசனையும்  போட்டுள்ளார். அதாவது இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்க ஓகே..

இந்தியன் 2 படத்திற்கு ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் கேட்டுள்ளார். எத்தனை நாள் கால் சீட் தேவையோ அதற்கு ஏற்றார் போல ஒரு நாளைக்கு ஒரு கோடி என கணக்கிட்டு சம்பளத்தை கேட்டுள்ளார் இதை கேட்ட இந்தியன் 2 பட குழு தற்பொழுது யோசித்துக்கொண்டு வருகிறதாம்…