தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சத்யராஜ் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் எனவே இந்த படத்தில் நடிப்பதற்காக இவர் கோடிக்கணக்கில் சம்பளத்தை உயர்த்தியது சினிமா வட்டாரங்களில் பெரிதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவரான ஷங்கரின் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் 1996ஆம் ஆண்டு இந்தியன் திரைப்படம் வெளிவந்து சூப்பர் ஹிட்டானது.
இதனால் இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வந்த நிலையில் தற்போது 25 வருடங்களுக்குப் பிறகு ஷங்கர் கமலஹாசன் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்க பல கோடி பொருட்செலவில் இந்தியன் 2 திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த படத்தில் நடிகர் கமலஹாசனை தொடர்ந்து காஜல் அகர்வால் ரகுல் ப்ரீத்தி சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள் மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பின் பொழுது விபத்து ஏற்பட்டதால் கமலஹாசன் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அதன் பிறகு சட்டமன்றத் தேர்தலில் கமல் மிகவும் பிசியாக இருந்து வந்த நிலை ஏற்பட பிடிப்பு தள்ளப்பட்டது. சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பு துவங்கப்பட்ட நிலையில் பரிதாபமாக திடீரென்று கிரேன் அருந்துவிழ மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள் எட்டு பேர் படுகாயமடைந்த நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குமா என கேள்விக்குறியாக இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முதல் நடைபெற்ற வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் நெடுமுடி வேணும் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற பட குழுவினர்கள் ஆலோசித்து வந்த நிலையில் நெடுமுடி வேண்டும் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க வைக்கலாம் என முடிவெடுத்துள்ளார்கள்.
மேலும் இது குறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பொழுது ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என கூறியுள்ளாராம் இதனைக் கேட்டவுடன் இந்தியன் 2 தயாரிப்பு நிறுவனம் ஷாக்காகி இருப்பதாகவும் மேலும் சத்யராஜிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.