அண்மை காலமாக ஆக்சன் படங்களை எடுத்து அசத்தி வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் கைதி மாஸ்டர் படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசனை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் தான் விக்ரம் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக எடுத்துள்ளார்.
படத்தின் கதைக்கு ஏற்றவாறு கமலுடன் கைகோர்த்து பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா எண் மற்றவர்கள் நடிப்பில் பின்னி பெடலெடுத்து உள்ளனர். படம் முழுக்க முழுக்க ஒரு போதைப் பொருள் கும்பலை தடுப்பது மற்றும் எதிரிகளை கொள்ளவது போன்று படத்தை எடுத்துள்ளனர். படம் ரசிகர்களை தாண்டி மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
இதனால் நாளுக்கு நாள் இந்த படத்திற்கான வரவேற்பு அதிகரித்து வரும் அதே சமயம் வசூலும் பின்னி பெடலெடுக்கும் என கூறப்படுகிறது நிச்சயமாக விக்ரம் திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்தாலும் செய்யும் என பலரும் கூறி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் உலக நாயகன் கமலஹாசன்.
சத்தியம் திரையரங்கிற்கு சென்று படத்தைப் பார்த்துவிட்டு ரசிகருடன் பேச வந்தது தன் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக கூறியுள்ளார் காரணம். நீண்ட இடைவெளிக்கு பிறகு கமலின் விக்ரம் படம் வந்துள்ளதால் ரசிகர்கள் திரையரங்கில் பார்க்க கொண்டாடி வருகின்றனர்.
இவ்வளவு சத்யம் திரையரங்கில் அனைத்து திரையரங்குகளிலும் கமலின் விக்ரம் திரைப்படம் ஓடுகிறது இதனால் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது இதை பார்த்த கமலஹாசன் பூரிப்படைந்து போனாராம் மேலும் என் வாழ்நாளில் எவ்வளவு பெரிய ரசிகர் கூட்டத்தை திரையரங்கில் பார்த்ததில்லை என கூறி ஆச்சரியப்பட்டு போனாராம்.