வருடா வருடம் பொங்கலை முன்னிட்டு சிறப்பான டாப் ஹீரோக்களின் படங்கள் வெளிவருவது வழக்கம் ஆனால் இந்த தடவை டாப் நடிகர்களின் படங்கள் வெளிவருவதற்கு பதிலாக காமெடி நடிகர்கள் இளம் ஹீரோக்களின் படங்கள் போன்றவை வெளிவந்து மக்களை என்டர்டைன்மென்ட் செய்து வருகிறது.
அந்த வகையில் இயக்குனர் கிஷோர் ராஜ் குமார் இயக்கத்தில் காமெடி நடிகர் சதீஷ் நடித்துள்ள நாய் சேகர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் குக் வித் கோமாளி சீசன் 2 பிரபலம் பவித்ரலக்ஷ்மி ஹீரோயினாக நடித்துள்ளார்.
நாய் சேகர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது இதில் சதீஷ், விஜய் டிவி பாலா மற்றும் சில நடிகர்களும் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக காணொளி வழியாக கலந்துகொண்ட ராதிகா சரத்குமார் சதீஷிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார் அதாவது :
நீங்கள் ஹீரோவாக அவதாரம் எடுத்து உள்ளீர்கள் உங்களுக்கு யார் காம்பெடிஷன் ரஜினி – கமல், அஜித் – விஜய் ஆகியவர்களை தவிர்த்து உங்களுக்கு யார் காம்பெடிஷன்னாக இருக்கும் ஹீரோ யார் என ராதிகா கேட்டார் அதற்கு பதிலளித்த சதீஷ் அக்கா நான் யாருக்கும் போட்டியாக இல்லை. சிறப்பான படங்களை மக்களுக்கு கொடுத்து அசத்தினால் போதும் மக்கள் என் படத்தை பிடித்து பார்த்தால் இருந்தால் அதுவே நல்லது என கூறினார்.
நான் காம்பெடிஷன்னாக யாரையும் பார்க்கவில்லை உங்களுக்காக சொல்ல வேண்டுமென்றால் நான் சரத்குமார் சாருக்கு போட்டி என கூறினார். எது எப்படியோ ராதிகா சரத்குமார் மற்றும் காமெடி நடிகர் சதீஷ் பேசிய அந்த கலந்துரையாடல் மக்கள் மத்தியில் தற்போது வைரலாக பரவி வருகிறது இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.