தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சதீஷ் இவர் தற்போது தர்ஷா குப்தா மற்றும் சன்னி லியோன் நடித்து வரும் ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். அந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சதீஷ் அவர்கள் மேடையில் பேசும்போது பல சர்ச்சை கிளப்பும் விஷயங்களை கூறியிருந்தார்.
அப்பதான் அவர் மேடையில் பேசிய ஒரு சில வார்த்தைகள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது பாலிவுட்டில் கவர்ச்சி கன்னியாக வளம் வரும் நடிகை சன்னி லியோன் அவர்கள் அந்த நிகழ்ச்சியில் புடவை கட்டிக்கொண்டு வந்திருந்தார் அதை பார்த்த சதீஷ் பாலிவுட் நடிகை புடவை கட்டிக் கொண்டு வந்திருக்கிறார் நம்ம கோயம்புத்தூர் நடிகை எப்படி வந்திருக்கிறார் என்று பாருங்கள் என அவர்களுடைய ஆடையை பற்றி கேலி கிண்டல் செய்திருக்கிறார்.
இப்படி பேசும்போது அப்போது அது வைரலாகவில்லை ஆனால் தற்போது அது செம வைரல் ஆகி வருகிறது அதாவது பெண்கள் மாடல் டிரஸில் இருந்தால் என்ன புடவையில் இருந்தால் என்ன அது அவர்களுடைய தனிப்பட்ட ஒரு விஷயம் அதில் நீங்கள் தலையிடக்கூடாது என்று விமர்சனம் தற்போது எழுந்துள்ளது.
இதற்கு விளக்கம் அளித்த சதீஷ் தர்ஷா குப்தா சொல்லித்தான் நான் அப்படி சொன்னேன் என்று கூறியிருக்கிறார். அதாவது அந்த மேடையில் சதீஷ்க்கு அருகே உட்கார்ந்து இருந்த தர்ஷா குப்தா நாம் தற்போது சன்னி லியோன் மாதிரி உடை அணிந்து கொண்டு வந்திருக்கிறேன் சன்னி லியோன் எந்த மாதிரி உடை அணிந்து கொண்டு வருவார் என பார்ப்போம் என்று சதீஷிடம் கூறியிருக்கிறாராம் அப்போது சன்னி லியோன் புடவையில் வந்ததும் அதிர்ச்சியாக இருக்கிறாராம் இதை சதீஷிடம் கூறியுள்ளாராம்.
இதைத்தான் சதீஷ் அவர்கள் மேடையில் கூறியதாக அந்த விமர்சனங்களுக்கு பதில் கொடுத்துள்ளார் ஆனால் தர்சா குப்தா தற்போது ஒரு பதிவை போட்டுள்ளார் அதாவது என்ன சொல்றீங்க சதீஷ், நான் உங்களிடம் எதுவுமே சொல்லவில்லையே அதுவும் தன்னைத் தானே அசிங்கப்படுத்தி கொள்ள யாராவது விரும்புவார்களா என்று கூறியுள்ளார் இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகிய வயிறுலாகி பரவி வருகிறது.