இன்றும் மறக்க முடியாத சத்யராஜின் ஆறு வசனங்கள்..! அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..!

sathyaraj-1
sathyaraj-1

தமிழ் சினிமாவில் வில்லனாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்த நடிகர் சத்யராஜ் தற்போது ஹீரோவாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் குணச்சித்திர வேடத்திலும் தன்னுடைய நடிப்பு திறனை வழிகாட்டி ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகியுள்ளார் அந்த வகையில் இவர் ஒவ்வொரு திரைப்படங்களிலும் ஒவ்வொரு வகையான வசனங்கள் பேசுவது வழக்கம் அந்த வகையில் இவருடைய திரைப்படத்தில் இடம் பெற்ற மறக்க முடியாத வசனங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

தகடு தகடு இந்த வசனம் ஆனது கமலஹாசன் நடிப்பில் வெளியான காக்கிச்சட்டை என்ற திரைப்படத்தில் சத்யராஜ் அவர்கள் வில்லனாக நடித்திருப்பார் அந்த படத்தில் அடிகடி சத்யராஜ் தகடு தகடு என கூறுவது அப்பொழுது வித்தியாசமாக தன்னுடைய பாடி லாங்குவேஜ் காட்டி பேசுவது மிகவும் ரசிகர்களை கவர்ந்தது.

என்னம்மா கண்ணு  தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வெளியான மிஸ்டர் பாரத் என்ற திரைப்படத்தில் இந்த வசனம் இடம் பெற்றுள்ளது அந்த வகையில் இந்த திரைப்படத்தில் சத்யராஜ் அவர்கள் வில்லனாக நடித்திருப்பார் அப்பொழுது இவர் பேசும் டயலாக் ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டது.

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்றீங்க சத்யராஜ் அவர்கள் 24 மணி நேரம் என்ற திரைப்படத்தில் மிகவும் கொடூரமான வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் சத்யராஜுக்கு இந்த திரைப்படத்தில் பெண்களை கடத்தி கொடுமைப்படுத்தும் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருப்பார் அப்பொழுது என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டீங்க என்ற வசனம் மிகவும் பிரபலமாக உள்ளது.

நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ இந்த வசனம் ஆனது அமைதிப்படை என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற வசனம் ஆகும் இதில் இரண்டு சத்யராஜ் நடித்திருப்பார்கள் அதில் ஒரு சத்யராஜ் நாகராஜசோழன் எம்எல்ஏ வாகவும் மற்றொரு சத்யராஜ் பிச்சைக்காரன் ஆகவும் நடித்திருப்பார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் எலக்சன் போது சத்யராஜ் கூறும் இந்த வசனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

மப்புமா மப்பு இந்த வசனமானது அமைதிப்படை திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் மற்றொரு வசனம் ஆகும் இந்த  திரைப்படத்தில் மற்றொரு சத்யராஜ் அவர்கள் குடித்துவிட்டு தள்ளாடுவார் அப்பொழுது எதற்காக கொடுத்தீர்கள் என்று மகன் கேட்கும் பொழுது நாக்களாக இந்த டயலாக்கை கூறுவார்.

மணியா அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா இந்த வசனமும் அமைதிப்படை திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம் ஆகும். மேலும் இந்த வசனம் மணிவண்ணிடம்  அடிக்கடி கூறும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.