தமிழ் திரை உலகில் மிக பிரமாண்டமான ஸ்டண்ட் மாஸ்டர் என்றால் அது ஜூடோ ரத்தினம் தான். இவர் தமிழ்மொழி மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் உருவாகும் திரைப்படங்களில் சண்டை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் இதுவரை 1500 திரைப்படங்களுக்கும் மேலாக சண்டை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அந்த வகையில் எம்ஜிஆர் முதல் ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித் என பல்வேறு ஹீரோக்களின் திரைப்படத்தில் இவர் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார்.
தற்போது நமது ஸ்டண்ட் மாஸ்டருக்கு 92 வயது ஆகிறது இந்நிலையில் சமீபத்தில் பிரபல பத்திரிகையாளர்களுடன் பேட்டியில் பேசிய நமது ஸ்டண்ட் இயக்குனர் நான் பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி உள்ளேன்.
அந்த வகையில் டி ராஜேந்திரன் சொந்த திரைப்படமான தங்கைக்கோர் கீதம், உயிருள்ளவரை உஷா ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நான்தான் சண்டை பயிற்சியாளராக இருந்தேன். அப்பொழுது சத்யராஜ் மற்றும் டி ராஜேந்திரன் ஆகிய இருவருக்கும் சண்டை காட்சிகள் நடந்தது
ஆனால் நான் சண்டை பயிற்சியின் பொழுது ஒவ்வொரு காட்சியின் செய்கையையும் மிக பொறுமையாகவும் துல்லியமாகவும் சொல்லிக்கொடுத்தேன் ஆனால் டி ராஜேந்திரன் அவர்கள் சத்யராஜ் வயிற்றில் மிக வேகமாக குத்தி விட்டார். இதனால் கோபமடைந்த சத்யராஜ் ராஜேந்திரனை பார்த்து மனுஷனாடா நீ என திட்டி விட்டு ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு உடனே வெளியேறி விட்டார்.
அதன் பிறகு நடிகர் சத்யராஜிடம் பேசிய அவரை இந்த திரைப்படத்தில் நடிக்க வைத்தார்கள் அதன்பிறகு ஜீப்பிலிருந்து போதிக்கும் காட்சி ஒன்று இருந்தது அதில் நானே நடிப்பேன் என டி ராஜேந்திரன் முந்திரிக்கொட்டை போல் முன்வந்தார். நாங்களும் சரி என சொல்லி செய்ய வேண்டும் பின்னர் அவரை காலை முறித்துக் கொண்டார்.