தமிழில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பாகுபலி திரைப்படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தவர் தான் சத்யராஜ் இன்று அவருடைய 68வது பிறந்த நாளை கொண்டாடிவரும் நிலையில் அவரைப் பற்றிய சுவாரசியமான தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. நடிகர் சத்யராஜ் 1954 ஆம் ஆண்டு கோவையில் பிறந்தார்.
பிறகு சினிமாவிற்கு அறிமுகமான இவர் தற்பொழுது வரையிலும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழைத் தொடர்ந்து மற்ற மொழிகளிலும் நடித்து தற்பொழுது தென்னிந்திய படங்களில் மட்டுமல்லாமல் பாலிவுட் படங்களிலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் வெளிவந்த சென்னை எக்ஸ்பிரஸ் என்ற இந்தி திரைப்படத்தில் தமிழராக சத்யராஜ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படம் வெளியாகி பல மொழிகளில் நல்ல வரவேற்பினை பெற்றது. இவ்வாறு சினிமாவில் அறிமுகமாகி ஹீரோவாக மட்டுமல்லாமல் ஆக்சன், எமோஷன், ட்ராமா மற்றும் நகைச்சுவை, வில்லன் என ஏராளமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் அந்த வகையில் பாகுபலி படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்து தேசிய அளவில் அங்கீகாரத்தைப் பெற்றார். எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான பாகுபலி திரைப்படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் முதலில் சத்யராஜ் தேர்ந்தெடுக்க வில்லையாம் இது குறித்த தகவல் தற்பொழுது வெளியாக பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
அதாவது இந்த வேடத்தில் முதலில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தான் நடிக்க இருப்பதாக முடிவெடுத்து இருந்தார்களாம் ஆனால் சில காரணங்களால் மோகன்லால் நடிக்க முடியாமல் போய் உள்ளது அதன் பிறகு தான் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார் சத்தியராஜ். இந்தப் படத்தில் தன்னுடைய 60 வயதிலையும் மிகவும் சுறுசுறுப்பாக நடித்திருந்தது பலரால் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் தற்பொழுது இந்த வருடத்தில் மட்டும் இவர் எதற்கும் துணிந்தவன், ராஜேஷ் ஷியாம், வீட்ல விசேஷம், பக்கா கமர்சியல் ஆகிய நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், நயன்தாராவுடன் கனெக்ட் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இன்று இவருக்கு 68வது பிறந்தநாள் என்பதால் பலரும் சத்யராஜுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.