52 வயதிலும் இளம் நடிகைகளுக்கே சவால் விடும் கமல் படம் நடிகை.! தாக்கு பிடிப்பார்களா தற்போதைய நடிகைகள்

kamal-tamil360newz
kamal-tamil360newz

amala gym video : நடிகை அமலா 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பாலிவுட் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், நடிகை அமலா கொல்கத்தாவில் பிறந்தவர். இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மைதிலி என்னை காதலி என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார்.

அதனைத் தொடர்ந்து மெல்லத் திறந்தது கதவு என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் 1991ம் ஆண்டு கற்பூர முல்லை என்ற திரைப்படத்தில் மாயா விநோதினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கமல், ரஜினி ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். தொடர்ச்சியாக நடித்து வந்த இவர் மடமடவென உச்ச நடிகைகளில் ஒருவரானார்.

பின்பு தமிழிலிருந்து அப்படியே தெலுங்கு பக்கம் சென்றவர், அங்கு நாகர்ஜுனாவை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலானார், தற்போது இவர் தமிழ், தெலுங்கு ஆகிய திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா விற்கு மாமியார் இவர் தான்.

52 வயதை கடந்த அமலா தற்போது தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சிகளை செய்து வருகிறார், தற்பொழுது இருக்கும் இளசுகள் எவ்வளவு எடை தூக்குவார்களோ அந்த அளவிற்கு நடிகை அமலா எடையை தூக்குகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.