தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். 2010 ஆம் ஆண்டு சிவா நடிப்பில் வெளிவந்த தமிழ் படம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார் இதனைத் தொடர்ந்து அவர் மதராசபட்டினம், தாண்டவம் வத்திகுச்சி, எதிர்நீச்சல், சிகரம்தொடு, கத்தி ,ஆம்பள, தங்கமகன், இரக்க ,பைரவா என பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
சதீஷ் இதன்மூலம் மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.இதனைத் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் நிலையான ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். தற்பொழுது சதீஷ் முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார் இந்தநிலையில் சதீஷ் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
மாப்பிள்ளையான சதீஷ் அவர்கள் இந்திய ஆணியின் முன்னாள் சுழற் பந்துவிச்சாளர் ஹர்பஜன் சிங்க்வுடன் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்பொழுது கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு தடைசெய்யப்பட்டது. இதனால் வீட்டிலேயே முடங்கி உள்ள சதீஷ் அவர்கள் தன்னுடைய நாயுடன் இருக்கும் வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சி அப்புறம் ஏன் நாய் கூட என அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ
#sathish #ComedyDay pic.twitter.com/gGlJsnl64Z
— Tamil360Newz (@tamil360newz) March 26, 2020