சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 169 ஆவது திரைப்படம் ஆன ஜெயிலர் படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார் வருகின்ற ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது. ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்.
மற்றும் ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள் மோகன், சிவகார்த்திகேயன் போன்றவர்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் ரஜினி பற்றிய செய்திகள் வெளிவந்து தான் கொண்டிருக்கிறது ரஜினி சூட்டிங் ஸ்பாட்டில் தன்னைவிட சீனியர் ஜூனியர் என பார்க்காமல் சகஜமாக பேசும் எண்ணம் கொண்டவர்.
அப்படி அண்ணாத்த திரைப்படத்தில் காமெடி நடிகர் சதீஷ் உடன் ரொம்ப ஜாலியாக பேசி பழகி உள்ளார். அது குறித்து நடிகர் சதீஷ் சில தகவல்களை கூறி உள்ளார். அண்ணாத்த படபிடிப்பின் போது குஷ்பூ மற்றும் மீனா முன்னிலையில் நடிகர் சதீஷ் ரஜினிகாந்திடம் இரண்டு பேருடன் நீங்கள் நடித்துள்ளீர்கள் யார் உங்களுக்கு பிடிக்கும் என கேட்க மீனா மற்றும் குஷ்பு.
ரஜினியை பார்த்து சார் தங்கள் பெயரை சொல்லுமாறு கேட்க ரஜினி சடனென்று கீர்த்தி சுரேஷ் கைகாட்டி எனக்கு கீர்த்தி சுரேஷ் தான் பிடிக்கும் என கூறிவிட்டாராம். சதீஷ் விடாமல் நீங்கள் கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகாவுடன் நடித்துள்ளீர்கள் இப்பொழுது கீர்த்தி சுரேஷ் உடன் நடித்துள்ளீர்கள் இவர்களில் யார் பிடிக்கும் என கேட்டுள்ளார்.
உங்களுக்கு சாட் ரெடியாகிவிட்டது நீங்கள் போங்க என ரஜினி துரத்தி விட்டுட்டாராம். பிறகு சதீஷும் ஷூட்டிங் போய் விட்டதாக சொல்லப்படுகிறது. ரஜினியும் கீர்த்தி சுரேஷ் அம்மாவும் கைகோர்த்து நெற்றிக்கண் திரைப்படத்தில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.