ரொமான்ஸ் பாடலுக்கு சீரியல் நடிகையுடன் அஜால் குஜாலாக நடனமாடிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபி.! ட்ரெண்டாகும் விடியோ

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு தொடர்ந்து விஜய் டிவி ரசிகர்கள் விரும்பும் வகையில் வித்தியாசமான கதை உள்ள பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் ஒளிபரப்பாகி ஒட்டுமொத்த சீரியல்களையும் ஓவர்டேக் செய்து டிஆர்பி-யில் முதல் 5 இடத்தை பிடித்து வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு கேரக்டரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்தவகையில் மிகவும் முக்கியமாக ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்தவர் தான் கோபி என்ற கேரக்டரில் நடித்து வரும் சதீஷ். இவர் தனது மனைவியையும் தனது குடும்பத்தையும் எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார் என்னென்ன தில்லுமுல்லு எல்லாம் செய்கிறார் என்பதை மையமாக வைத்து இவரின் கேரக்டர் எடுக்கப்படுகிறது.

எனவே தொடர்ந்து ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் இவரை திட்டி வருகிறார்கள். அந்தவகையில் சதீஷும் தொடர்ந்து என்ன திட்டாதீங்க பணம் கொடுக்கிறார்கள் அவர்கள் சொல்றபடி நான் நடிக்கிறேன் அதற்கு ஏன் என்ன திட்டுறீங்க என கதறிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது.

இதன் மூலம் பிரபலமடைந்த இவர் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துவரும் சதீஷ் கம்பம் மீனாவுடன் இணைந்து தொட்டால் பூ மலரும் என்ற பாடலுக்கு ரொமான்ஸ் நடனமாடி உள்ளார். இந்த வீடியோவை கம்பம் மீனா தனது இன்ஸ்டாகிராமில் சதீஷ்டன் நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அச்சிரியப்பட்டு வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.