பல கோடிக்கு விற்கப்பட்ட விடுதலை படத்தின் சேட்டிலைட் உரிமம்.? எந்த நிறுவனம் கைப்பற்றி உள்ளது தெரியுமா.?

viduthalai
viduthalai

சினிமா உலகில் ஒரு இயக்குனர் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு ஹிட் படங்களை கொடுத்து விட்டால் மக்களை அவர்கள் கவனிக்க தொடங்கி விடுவார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவில் சைலண்டாக இருந்துகொண்டு தனுஷுடன் இணைந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் வெற்றிமாறன்.

டாப் நடிகர்களையும் தாண்டி இவர் புதுமுக நடிகர்களை வைத்து படங்களை எடுத்து வெற்றி கண்டவர் என்பது குறிப்பிடதக்கது அந்த வகையில் விசாரணை படம் யாரும் எதிர்பார்க்காத ஒரு சிறப்பான படமாக அமைந்தது மேலும் இந்த படம் தமிழில் தாண்டி இந்திய அளவில் பேசப்பட்டது தற்போது கூட இந்த படத்திற்காக அவர் விருதை வாங்கியுள்ளார். மேலும் இயக்குனர் வெற்றிமாறன் தேசிய விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வெற்றிமாறன் காமெடி நடிகர் சூரியை வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க நாவலை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது அந்த நாவலை ஜெயமோகன் என்பவர் எழுதி இருந்தார் அவரை தற்போது இந்த படத்திற்கு திரைக்கதை எழுதி உள்ளார். இந்த படத்தில் போலீசாக சூரி நடிக்கிறார் கைதியாக விஜய்சேதுபதி நடித்து உள்ளார்.

ஆனால் உண்மையில் ஹீரோ சூரி தானாம் வாத்தியார் கதாபாத்திரத்தில் தான் விஜய்சேதுபதி நடித்து அசத்தி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. வெற்றிமாறனின் படங்கள் ஹிட் படங்கள் லிஸ்டில் இந்த படமும் இடம் பெறும் என கூறப்படுகிறது அந்த அளவிற்கு மிக சூப்பராக படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் இந்தப் படத்தின் சேட்டிலைட் உரிமம் தற்பொழுது விற்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. B4U நிறுவனம் மிகப் பெரிய ஒரு தொகையை கொடுத்து இதை கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. விடுதலை திரைப்படம் பல கோடிகளை அள்ளும் என்பது படக்குழுவின் கணிப்பாக இருக்கிறது.