தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் தான் நடிகர் சசிகுமார் இவர் தற்போது பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.அந்த வகையில் இவர் இயக்கும் திரைப்படங்கள் மட்டுமின்றி இவர் நடிக்கும் திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் உருவாகிக்கொண்டே இருக்கும் திரைப்படம் தான் எம்ஜிஆர் மகன், ராஜவம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய், முந்தானை முடிச்சு, நாநா ஆகிய திரைப்படங்கள் ஆகும்.
இந்நிலையில் தற்போது இயக்குனர் சசிகுமார் அவர்கள் பொன்ராம் இயக்கத்தில் நடித்துள்ள எம்ஜிஆர் மகன் என்ற திரைப்படம் ஆனது வருகின்ற தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ஆம் தேதி இணையத்தில் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அதேபோல பிரபாகரன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ள கொம்பு வச்ச சிங்கம்டா என்ற திரைப்படமானது வருகின்ற நவம்பர் 26 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் விரைவில் வெளியாகும் அந்த திரைப்படத்திற்கு போட்டியாக சசிகுமார் மற்றொரு திரைப்படமும் திரையில் வெளியாக உள்ளது ஒரு சுவாரஸ்யமான விஷயமாக அமைந்துள்ளது. அது வேறு எந்த திரைப்படமும் கிடையாது ராஜவம்சம் திரைப்படமாகவும்.
இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் சசிகுமார் மற்றும் நாயகியாக நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்துள்ளார்கள் இப்படம் வருகிற 26-ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள்.
இவ்வாறு தமிழ்த் திரை உலகில் இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் நடிப்பில் ஒரே நாளில் இரண்டு திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகும் போது இதுவே முதல் முறையாகும் என கூறப்படுகிறது.