தொடர் தோல்விகளால் மீண்டும் பழைய தொழிலை கையிலெடுக்கும் சசிகுமார்.? குருநாதர் கற்றுத்தந்தாச்சே..வேற என்ன பண்றது.!

sasikumar
sasikumar

சசிகுமார் இயக்குனராகத் தன்னை தமிழ் சினிமாவில் அறிமுகப் படுத்திக் கொண்டு பின் நடிகராகவும் தன்னை மாற்றிக்கொண்டார். முதல் படத்திலேயே இயக்குனராகவும் நடிகராகவும் நடித்து தன்னை வெளிக்காட்டிக் கொண்டார். முதல் படத்திலேயே சிறப்பாக நடித்த காரணத்தினால் என்னவோ தனது நடிப்பு திறமையின் மீது நம்பிக்கை வைத்து ஹீரோவாக அடுத்தடுத்து நடித்து வெற்றி படங்களை கொடுத்தார்.

இதனால் அவரது மார்க்கெட்டும் அசுர வளர்ச்சியை எட்டியது ஆனால் சமீபகாலமாக சசிகுமார் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவதால் வேறு வழி இல்லாமல் தற்பொழுது படங்களை இயக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். எழுத்தாளர் வேல ராமமூர்த்தி எழுதிய நாவல் தான் குற்றப்பரம்பரை.

இது சுதந்திரம் பெறுவதற்கு முன்பு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இந்த நாவல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாவலை மையமாக வைத்து படத்தை எடுக்க முதலில் பாரதிராஜா முனைப்பு காட்டினார். அந்த படத்தை அவரே இயக்கி நடிக்கவும் அதிகம் ஆர்வம் காட்டினார் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளிவந்து பாதியிலேயே நின்னது.

இவரைத் தொடர்ந்து இயக்குனர் பாலாவும் குற்றப்பரம்பரை படத்தை எடுக்க அதிகம் ஆர்வம் காட்டினார் ஆனால் இந்த இரண்டு இயக்குனர்கள் அந்த படத்தை எடுக்க முடியாமல் தள்ளாடி வரும் நிலையில்  நடிகரும், இயக்குனருமான சசிகுமார் தற்பொழுது குற்றப்பரம்பரை நாவலை  படமாகவோ அல்லது வெப் சீரிஸ்ஸாக எடுக்க அதிக முனைப்பு காட்டி வருகிறார் முதலில் பாரதிராஜா மற்றும் பாலாவிடம் இவர் ஒப்புதல் ஒருவழியாக வாங்கிவிட்டார்.

இந்த நாவல் மிகப் பெரியது என்பதால் படமாக எடுப்பது மிகப் பெரிய கஷ்டம் எனவே இந்த படத்தை இவர் சீரிஸ்ஸாக எடுத்தால் நன்றாக இருக்கும் என கருதி உள்ளாராம் சசிகுமார் அதன் காரணமாகவே தற்போது இவர் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் இதை வெப்சீரிஸ்ஸாக எடுக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் என்று கூறப்படுகிறது.