சசிகுமாரின் அடுத்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! உச்சகட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

sasikumar

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சசிகுமார் இவர் கடைசியாக நாடோடிகள் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது 5 திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம் நாநா, பரமகுரு, எம்ஜிஆர் மகன் என ஐந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார், இதில் எம்ஜிஆர் மகன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இந்தநிலையில் சசிகுமார் நடித்த ராஜவம்சம் திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி விட்டது என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு, இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் படத்தை சென்சார் குழுவிற்கு அனுப்பி வைத்தார்கள் படக்குழு.

படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு யூ சர்டிபிகேட் கொடுத்துள்ளார்கள், இந்த திரைப்படம் திரையரங்கம் திறந்தவுடன் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை சுந்தர் சி யின் உதவி இயக்குனர் கதிர்வேலு தான் இயக்கியுள்ளார்.

rajavamsam-tamil360newz 1
rajavamsam-tamil360newz 1

படத்தில் சசிகுமார் முன்னணி நடிகராகவும், நிக்கிகல்ராணி முன்னணி நடிகையாகவும் நடித்துள்ளார், இவர்கள் இருவரும் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார்கள், மேலும் படத்தில் சதீஷ் யோகிபாபு, மனோபாலா, தம்பிராமையா ராதாரவி, ரேகா, சுமித்ரா, நிரோஷா என 49 முக்கிய பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளார்கள்.

பல நட்சத்திரங்கள் நடித்துள்ளள்ளதுதான் இந்த திரைப்படத்தின் சிறப்பு, சசிகுமாருக்கு இந்த திரைப்படம் 19-வது திரைப்படமாக உருவாகியுள்ளது, மேலும் இந்த திரைப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட மற்றும் காமெடி நிறைந்த திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

rajavamsam-tamil360newz 1