பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது ஆர்யா கிடையாதாம்..! இந்த டாப் ஹீரோ தானாம்..!

aarya
aarya

sarpetta parambarai movie first acting to this hero: தமிழ் சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமாவிலும் ஒரு நடிகர் நடிக்க இருந்த திரைப்படத்தில் வேறு ஒரு நடிகர் நடித்து ஹிட் அடைந்துள்ளதை நாம் பல முறை பார்த்துள்ளோம்.  அந்த வகையில் பா ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை திரைப்படமும் விதிவிலக்கல்ல.

அதேபோல் தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் வில்லனாக அறிமுகமாகி அதன் பிறகு ஹீரோவாக மாறி ஹிட் கொடுத்துள்ளார்கள் அந்த வகையில் நடிகர் ஆர்யாவும் முதலில் வில்லனாக அறிமுகமானார் அதன் பிறகு ஹீரோவாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பிடித்திருக்கிறார்.

ஆர்யாவின் திரைபடங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது,  கடைசியாக ஆர்யா மகாமுனி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இதனைத் தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை என்ற படத்தில் நடித்து வந்தார்.

இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை மிரட்டியது. ஏனென்றால் இந்த திரைப்படத்தில் ஆர்யா சிக்ஸ்பேக் வைத்து கரடுமுரடான உடல் எடையை ஏற்றி மிரட்டினார்.  ஆர்யா ஒரு குத்துச்சண்டை வீரர் போல் தயாராகியுள்ளார். இதற்காக ஆர்யா மேற்கொண்ட பயிற்சிகள் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பா ரஞ்சித் நான் எந்த ஒரு திரைப்படத்தையும் நடிகர்களை மனதில் வைத்து எழுத மாட்டேன் ஆனால் ரஜினி காலா படம் மட்டும் அப்படி எழுதினேன் எனக் கூறியுள்ளார் மேலும் பேட்டி எடுப்பவர் இந்த கதை சூர்யாவுக்காக எழுதப்பட்டதா என கேட்டுள்ளார்.

அதற்கு சிரித்துக்கொண்டே பா ரஞ்சித் இந்தப் படத்திற்காக பல முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது அதில் சூர்யாவும் ஒருவர்.  ஆனால் எனக்கு ஆர்யாவை மெட்ராஸ் பட சமயத்தில் இருந்தே தெரியும் அவர் என்னிடம் அடிக்கடி தனக்கான ஒரு கதையை தயார் செய்யுமாறு கேட்டுக் கொண்டே இருப்பார் அதனால் இந்த திரைப்படம் மூலமாக நாங்களிருவரும் இணைந்துள்ளோம் என கூறியுள்ளார் பா ரஞ்சித்.

இந்த திரைப்படத்தில் வழக்கம்போல் கலையரசன் பசுபதி சந்தோஷ் ஜான்விஜய் சஞ்சன நடராஜன் உள்ளிட்ட பல நடிகர்கள் ஆர்யா உடன் இணைந்து நடித்துள்ளார்கள்.