பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை இந்த திரைப்படம் திரையில் வர வேண்டியது ஆனால் சில காரணங்களால் OTT இணையதளமான அமேசான் பிரைம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் வடசென்னையில் பாக்ஸிங் கலாச்சாரம் பற்றிய திரைப்படமாக உருவாக்கப்பட்டது. 70 காலகட்டத்தில் வடசென்னையில் பாக்ஸிங் கலாச்சாரத்தில் சார்பட்டா பரம்பரை மற்றும் இடியப்ப நாயக்கர் பரம்பரை என இருந்தார்கள் அவர்களை மையப்படுத்தி தான் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம் முழுக்க முழுக்க விளையாட்டை மையபடுத்தி உருவாக்கப்பட்ட படம் என கூறிவிட முடியாது ஏனென்றால் இந்த திரைப்படத்தில் அரசியல் பங்கு மக்களின் வாழ்வாதாரம் என பலவற்றை பேசிய திரைப்படமாக அமைந்தது படத்தில் ஆர்யாவுடன் இணைந்து பசுபதி, சபீர், ஜான் கொக்கான், ஜான் விஜய், மாறன் என பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள் ஆர்யாவுக்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் மாரியம்மன் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் துஷாரா விஜயன்.
இந்த திரைப்படத்தில் அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்திருந்தார்கள் அதேபோல் அனைவரிடமும் பாராட்டையும் பெற்றார் இந்த நிலையில் இந்த கதாபாத்திரம் எந்த நிஜ பாஸ்கரின் குணங்களுடன் ஒற்றுப் போகிறது என்பதை இங்கே காணலாம்.
கபிலன் – முகமது அலி- ஆர்யா : இந்த திரைப் படத்தில் ஹீரோவாக நடித்த ஆர்யாவின் பாக்சிங் ஸ்டைல் அனைத்தும் உலகப் புகழ்பெற்ற முகமது அலி அவருடையதுதான் அதனால்தான் நீயே என்ற பாடலில் கூட அவரின் பிரபலமான வசனமான “float like a butterfly, sitting like a killer bee” என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.
ஜான் கொக்கான் – வேம்புலி – மைக் டைசன் : இந்த திரைப்படத்தில் சார்ப்பட்டா பரம்பரையை வெல்ல நினைப்பது வேம்புலி தான் வேம்புலி கதாபாத்திரம் முழுக்க முழுக்க டைசன் உடையதுதான் அந்த அளவு முரட்டுத்தனமும் ஆக்ரோஷமும் இவரது நடிப்பில் சேர்த்துக் கொண்டுள்ளார் ஜான் கொக்கான்.
ஷபீர் – டான்சிங் ரோஸ் – பிரின்ஸ் நசீம் : இந்த திரைப்படத்தில் ரசிகர்களிடம் அதிக மார்க் வாங்கியது என்றால் அது டான்சிங் ரோஸ் தான் இவரின் குத்துசண்டை விளையாடும் விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது இந்த கதாபாத்திரம் பிரிட்டனை சேர்ந்த பிரின்ஸ் நசீர் அகமது என்பவரை ரோல் மாடலாக வைத்து உருவாக்கப்பட்டது இவரின் ஸ்டைலாக நடப்பது, ஆடுவது எதிராளியை சீண்டுவது, நொடிப்பொழுதில் நாக்அவுட் செய்வது இவரின் ஸ்பெஷல்.
சந்தோஷ் பிரதாப் ராமன் ராமன் ஜார்ஜ் போர்மன் : சர்வதேச பாக்சிங் உலகில் மிகவும் பிரபலமான ஜார்ஜ் போர்மன் அவர்களை ரோல் மாடலாக வைத்து இந்த ராமன் கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளாராம் ரஞ்சித். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு நிஜ பாக்ஸர்களை வைத்து அடிப்படையாக உருவாகியுள்ளது இந்த சார்பட்டா பரம்பரை கதாபாத்திரம்.