தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை. இந்தத் திரைப்படம் அமேசான் இணையதளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இத்திரைப்படம் 24 கோடியே 50 லட்சம் செலவு செய்து எடுக்கப்பட்ட நிலையில், தற்போது 20 கோடி லாபத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா ரஞ்சித் இயக்கத்தில் குத்து சண்டை விளையாட்டை மையமாக வைத்துக்கொண்டு இயக்கிய திரைப்படம் சார்பட்டா பரம்பரை, 1970களில் வடசென்னையில் குத்துச்சண்டை விளையாட்டு மிகவும் பிரபலமாக இருந்தது. இந்த விளையாட்டை விளையாடுவதற்காக சில பரம்பரையை சேர்க்க வேண்டி இருந்தனர்.
அதிலும் குறிப்பாக சார்பட்டா பரம்பரை மற்றும் இடியாப்ப பரம்பரையை மையப்படுத்தி இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இத்திரைப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஜூலை 22ஆம் தேதி வெளியாகிய நிலையில் படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு தெரிவித்து வந்தனர்.
அதேபோல் இந்தப் படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் அந்த கதைக்கு ஏற்றவாறு தங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளது படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் ஆக மாறியது. குறிப்பாக கபிலன், ரங்கன் வாத்தியார், டான்சிங் ரோஸ், வேம்புலி, போன்றோர் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்தனர்.
இந்நிலையில் 24 கோடியே 50 லட்சம் ரூபாயில் உருவான இத்திரைப்படம் சேட்டிலைட் உரிமையை விஜய் டிவி ஆறு கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது. ஆடியோ ரைஸ் மாஞ்சா நிறுவனம் 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது, இத்திரைப்படத்தின் ஓவர்சீஸ் மற்றும் மொழிக்கான சேட்டிலைட் உரிமம் இதுவரை எடுக்கப்படவில்லை ஏனென்றால் சுமார் 3 கோடி வரை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தவிர இத்திரைப்படத்தின் ஹிந்தி உரிமையை பி4 நிறுவனம் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது அதேபோல் ரீமேக் ரைட்ஷிம் இதுவரை எடுக்கப்படாததால் 3 கோடி வரை செல்ல வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
திரைப்படம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு தயாரித்த கே 4 ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் புரொடக்ஷன் நிறுவனம் 3 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர் இதில் மட்டுமே சுமார் 14 கோடி இவர்களுக்கு லாபம் வந்துள்ளது. மேலும் உள்ள உரிமங்களுக்கு விற்றால் சுமார் 20 கோடிக்கு மேல் லாபத்தை அடித்து தூக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன.