வெகுநாள் விரதத்திற்கு சரியான படையல் கிடைத்தது போல் ஆர்யாவுக்கு அமைந்த திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்களை எளிதில் கவர்ந்து விட்டது.
இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடித்த பல்வேறு பிரபலங்களும் அவர்களுடைய கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் ஹீரோயினான துஷாரா விஜயன் நடித்த கதாபாத்திரமும் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்த திரைப்படத்தில் கதாநாயகியான துஷாரா விஜயன் திண்டுக்கல்லை பூர்வீகமாக கொண்டவர் இவர் இதற்கு முன்பாக போதை ஏறி புத்தி மாறி மற்றும் அன்புள்ள டில்லி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நமது நடிகை ரசிகர்களிடையே மனம் விட்டு பேசி உள்ளார்.
அப்பொழுது அவர் கூறியது என்னவென்றால் படப்பிடிப்பு தளத்தில் பட குழுவினர்கள் மற்றும் சக நடிகர்கள் மிக ஜாலியாக கலாய்ப்பார்கள் ஆனால் அவை எதையுமே நான் பெரிதாக எடுத்துக் கொண்டதே கிடையாது. அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படமானது வட சென்னையில் நடந்த குத்து சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதன் காரணமாக சென்னை பாஷையை கற்றுக் கொள்ள நான் பெரிதும் கஷ்டப்பட்டேன் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப் படத்தின் டப்பிங் பணிகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது டப்பிங்கை மிக அதிக நேரம் எடுத்துக் கொண்டது நான் ஒருவர் மட்டும்தான். அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் தமிழ் பேசும் நடிகையாக இருந்து இந்த திரைப்படத்தில் நடித்து வெற்றி பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது என கூறியுள்ளார்.
நமது நடிகை திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பது மட்டுமல்லாமல் மாடல் அழகியாகவும் சில விளம்பர திரைப்படங்களிலும் நடித்து தன்னை பிரபலப் படுத்தி உள்ளார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட போட்டோ ஷூட் புகைப்படமானது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவிவருகிறது.