சார்பட்டா படத்தில் ஆர்யா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நான் தான் பேட்டியில் வருத்தத்துடன் கூறிய பிரபல நடிகர்.!

sarpatta paramparai
sarpatta paramparai

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை இந்தத் திரைப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து சபீர் துஷாரா விஜயன்,  பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன். ஆகியவர்கள் நடித்துள்ளார்கள். அதேபோல் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை மட்டும் பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த திரைப்படம் 1960களில் வடசென்னையில் இடியம்ப பரம்பரை  சார்பட்டா  பரம்பரை ஆகிய இரண்டு பிரிவுகளுக்கிடையே  நடைபெற்ற மோதலை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டது. மேலும் இந்த திரைப்படம் திருச்சமுண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து வரலாறு கதையாக பா ரஞ்சித் அவர்கள்  இயக்கினார்.

முதன் முதலில் பா ரஞ்சித் அவர்கள் இந்த திரைப்படத்தின் கதையை நடிகர் கார்த்தியை மனதில் வைத்து தான் கதையை எழுதினார் ஆனால் கார்த்தியிடம் தேதிகள் இல்லாத காரணத்தினால் இந்த திரைப்படத்தில் கார்த்தி நடிக்க முடியாமல் போனது அதன் பிறகு நீண்ட காலம் கழித்து முக்கிய வேடத்தில் ஆர்யாவை அணுகியுள்ளார்கள்.

இந்தத் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தீவிர பயிற்சிகளுக்குப் பிறகு 2020ல் பிப்ரவரி மாதம் படத்தின் தயாரிப்பு பணிகளை தொடங்கினார்கள் ஆனால் கோவிட் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது  பின்பு மீண்டும் பட பிடிப்பு தொடங்கி முழு படத்தையும் முடித்தார்கள். படமும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது அதுமட்டுமில்லாமல் படத்தில் வாத்தியார் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பல நாட்கள் வாத்தியார் கதாபாத்திரத்தை வைத்து மீம்ஸ்கள் பறந்தன. இதன் நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் கார்த்தி அவர்கள் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில்  நான் நடிக்க வேண்டியது கால் சீட் காரணமாக தான் என்னால் நடிக்க முடியாமல் போனது என மிகவும் வருத்தத்துடன் அந்த பேட்டியில் கூறியுள்ளார் இந்த தகவல் ரசிகர்களிடைய வைரலாகி வருகிறது.