மாநாடு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் என வெற்றி திரைப்படங்களை தந்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். மேலும் இவருடைய இயக்கத்தில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதனால் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்பொழுது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது பிரபல நடிகை சரிதா லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க விரும்புவதாக பேட்டியில் கூறியுள்ளார்.
அதாவது 1978ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த அவள் அப்படித்தான் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான அவர் தான் சரிதா. இதனை அடுத்து தப்பு தாளங்கள், நூல் வேலி, பொண்ணு ஊருக்கு புதுசு, வண்டி சக்கரம் என ஏராளமான திரைப்படங்களில் நடித்தார்.
இவ்வாறு நடிப்பையும் தாண்டி டப்பிங் குரல் கொடுப்பதிலும் பணியாற்றி வந்த இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது தமிழில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அடுத்தடுத்து சினிமாவில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன் குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தை பார்த்தேன் மிகவும் சிறப்பாக அந்த படத்தினை அவர் இயக்கியிருந்தார்.
இதனை அடுத்து அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன் அதோடு உங்களது இயக்கத்தின் நடிப்பதற்கு எனக்கு ஆசையாக உள்ளது என்றும் தெரிவித்தேன் அப்போது அவர் கண்டிப்பாக வாய்ப்புகள் தருகிறேன் என்று கூறியதோடு என்னுடைய அம்மாவிற்கு உங்களை ரொம்ப பிடிக்கும் அவர் உங்களது ரசிகை என்று கூறியதாக இந்த தகவலை சரிதா பகிர்ந்துள்ளார்.