தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டங்களில் தற்போது முன்னணி நடிகர்களாக போட்டி போட்டு வளரும் நடிகர்களில் சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் உள்ளனர். இதில் கார்த்தி நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு 21ஆம் தேதி வெளியான சர்தார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வந்து தற்போது வசூலில் வெற்றியடைந்துள்ளது.
ஆனால் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் கடுமையான விமர்சனத்தை பெற்று தோல்வியை நோக்கி பயணம் செய்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க ஒரு காமெடி படம் என்பதால் ரசிகர்களுக்கு சலிப்பாகிப்போச்சு என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால் இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் கார்த்திக் நடித்து வெளியான சர்கார் திரைப்படம் ஒரு ஆக்சன் கலந்த திரைப்படம் என்பதால் ரசிகர்கள் இதை விரும்பி பார்ப்பனர் அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் பட்ஜெட்டை விட லாபம் பார்த்து விட்டது.
பிரின்ஸ் திரைப்படமோ போட்ட பட்ஜெட்டை கூட தொட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு தற்போது உலகம் முழுவதும் 47.25 கோடி வரை வசூல் செய்து உள்ளது. மேலும் சர்தார் திரைப்படம் 50 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் வெளியான முதல் நாள் மட்டும் சர்தாரை விட அதிகமான வசூலை பெற்று இருந்தது ஆனால் பிரின்ஸ் திரைப்படம் நெகடிவ் விமர்சனங்களால் அடுத்தடுத்த நாட்களில் குறைவான வசூலை பெற்று வருகிறது. பிரின்ஸ் திரைப்படம் வெளியாகி கடந்த நான்கு நாட்களில் ஒட்டுமொத்தமாக 23.9 கோடி வரை வசூல் செய்துள்ளதாக குறிப்பிடுகிறது. உலக அளவில் 32.6 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிரின்ஸ் திரைப்படம் நூறு கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரிண்ஸ் திரைப்படத்திற்கு செலவு செய்த பட்ஜெட்டையே எடுக்க முடியாமல் தற்போது திணறி வருகிறது.