சர்தார் கார்த்தி நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும்ஹீரோயின் அறிவிப்பு..

karthik actor
karthik actor

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கார்த்திக் தொடர்ந்த பல முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் நடித்த வருகிறார் அந்த வகையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு முன்பு விருமன் திரைப்படத்தில் கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.

மேலும் அவருடைய நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் சர்தார். இந்த திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றினை பெற்றது. இவ்வாறு தொடர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்து வரும் நடிகர் கார்த்திக் தற்பொழுது தன்னுடைய அடுத்த படத்தில் நடிப்பதற்கான வேலையை துவங்கியுள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவருடைய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது அதாவது நடிகர் கார்த்திக் நடிப்பில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தினை ராஜீமுருகன் இயக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்த படம் நேற்று பூஜை உடன் சென்னையில் நடைபெற தொடங்கியுள்ளது.

இந்த படத்திற்கு ஜப்பான் என டைட்டில் வைத்துள்ளார்கள். இவ்வாறு ஜப்பான் திரைப்படத்தினை டீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் ஜி.வி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் இதனை தொடர்ந்து நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் நேற்று நடந்த பூஜையில் நடிகர் கார்த்திக், அனு இமானுவேல், ராஜுமுருகன், ஜிவி பிரகாஷ் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு பூஜையை சிறப்பித்து உள்ளார்கள். அந்த வகையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கி இருக்கிறது.