சர்தார் படக்குழுவினருக்கு விலை உயர்ந்த வாட்டர் பாட்டிலை பரிசாக கொடுத்த நடிகர் கார்த்தி.!

sardar
sardar

2022 வருடம் தமிழ் சினிமா நடிகர், நடிகைகளுக்கு நல்ல ஆண்டாக இருந்து வந்துள்ளது. ஏனென்றால் பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன. அஜித்தின் வலிமை, விஜயின் பீஸ்ட், கமலின் விக்ரம், மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் என சொல்லிக்கொண்டு போகலாம்.. அந்த அளவிற்கு பல படங்கள் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக அடித்து நொறுக்கி உள்ளது.

அதே போல குறைந்த பட்ஜெட்டில் உருவான படங்களும் நல்ல வசூலை பெற்று  இருக்கின்றன அந்த வகையில் கார்த்திக்  நடித்த விருமன்,   தீபாவளி முன்னிட்டு வெளியான சர்தார் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே இவருக்கு வெற்றி திரைப்படங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது சரியாக சொல்ல வேண்டும் என்றால் சர்தார் திரைப்படம்..

இவருக்கு அமோக வெற்றியை பெற்று தந்தது ஆம் படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக 100 கோடிக்கு மேல் அள்ளி அசத்தியது இந்த திரைப்படத்தை எஸ்பி மித்ரன் எடுத்திருந்தார். கார்த்தி தனது வழக்கமான ஸ்டைலில் செம சூப்பராக இரட்டை கதாபாத்திரத்தில் நடித்தார். அவருடன் கைகோர்த்து முனீஸ் காந்த், லைலா, ராசி கண்ணா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் இயக்குனருக்கு ஒரு பரிசு பொருளை கொடுத்து அசத்தினால் அதனைத் தொடர்ந்து தற்பொழுது இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியை உறுதி செய்த பிறகு நடிகர் கார்த்தி படக்குழுவினருக்கு ஒரு ட்ரீட் வைத்து அவர்களுக்கு விலை உயர்ந்த பரிசு பொருளை கொடுத்துள்ளார்.

நடிகர் கார்த்தி பட குழுவினர் அனைவருக்கும் வாட்டர் பாட்டிலை கொடுத்துள்ளார் அந்த வாட்டர் பாட்டில் முழுக்க முழுக்க வெள்ளியினால் ஆனது அதன் மதிப்பு மட்டுமே 30 ஆயிரம் என சொல்லப்படுகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

sardar
sardar