நடிகர் கார்த்தி தனது திரை பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் வித்தியாசமான படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். அப்படி அதில் அவர் நடித்து வெளிவந்த பெரும்பாலான படங்கள் வெற்றி படங்களாக மாறியதால் இவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டம் உருவாகி இருக்கிறது.
இப்பொழுதும் இவர் தொடர்ந்து சூப்பரான படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் இந்த வருடத்தில் மட்டும் கார்த்தி நடித்த பொன்னியின் செல்வன், விருமன் போன்ற திரைப்படங்கள் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக வெற்றி அடைந்தது. இதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் தான் சர்தார்.
இந்த படத்தை எஸ்பி மித்ரன் இயக்கியிருந்தார் கார்த்தியும் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் சூப்பராக நடித்திருந்தார் இந்த படம் முழுக்க முழுக்க தண்ணீர் சம்பந்தப்பட்ட ஒரு சமூக அக்கறை உள்ள கதையாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அதன் காரணமாக சர்தார் திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்தது.
இந்த திரைப்படத்தில் கார்த்தி உடன் கைகோர்த்து முனீஸ் காந்த், ராசி கண்ணா, லைலா மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர், நடிகைகள் சூப்பராக நடித்திருந்தனர் தொடர்ந்து சூப்பராக ஓடிக் கொண்டிருப்பதால் சர்தார் திரைப்படம் இதுவரை நல்ல வசூலை அள்ளி இருக்கிறது தற்பொழுது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் சர்தார் திரைப்படம்.
உலகம் முழுவதும் 12 நாள் முடிவில் மட்டுமே 90 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன வருகின்ற நாட்களிலும் கார்த்தியின் சர்தார் திரைப்படத்தை எதிர்த்து எந்த ஒரு படமும் ரிலீஸ் ஆகாமல் இருப்பதால் இந்த படத்தின் வசூல் வேட்டை தொடரும் என கூறப்படுகிறது மேலும் கார்த்திக் இந்த படத்தின் மூலம் கார்த்தி இந்த வருடத்தில் ஹாட்ரிக் வெற்றியை ருசித்து இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்..