நடிகர் கார்த்தி தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து ஓடி கொண்டிருக்கிறார். அந்த படங்களும் வெளிவந்து வெற்றியை ருசிக்கின்றன ஏன் இந்த வருடத்தில் நடிகர் கார்த்தி நடித்த விருமன், பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றன.
அதனை தொடர்ந்து தீபாவளி முன்னிட்டு கார்த்தி நடிப்பில் வெளிவந்த படம் சர்தார். இந்த படம் முழுக்க முழுக்க தண்ணீர் சம்பந்தப்பட்ட பிரச்சினையை எடுத்துரைக்கும் ஒரு திரைப்படமாக இருந்தது மேலும் இதில் பல சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் இடம் பெற்றிருந்தன. இதனால் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்து போனது தொடர்ந்து நல்ல விமர்சனத்தையே கொடுத்தனர் .
அதனால் இந்த திரைப்படம் திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. சர்தார் திரைப்படத்தில் கார்த்தி உடன் கைகோர்த்து ரஜிஷா விஜயன், ராசி கண்ணா, முனீஸ் காந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். படம் தொடர்ந்து சூப்பராக ஓடியதன் காரணமாக வசூலும் அடித்து நொறுக்குகிறது.
ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலுமே படத்தின் வசூல் குறையவில்லை என சொல்லப்படுகிறது. இந்த படத்தை எதிர்த்து பல திரைப்படங்கள் வெளி வந்தாலும் இந்த படத்திற்கு கிடைத்த வசூல் வேற எந்த படத்திற்கும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது வரை மட்டுமே உலக அளவில் சர்தார் திரைப்படம் 100 கோடியை எட்டி விட்டதாக தகவல்கள் வெளி வருகின்றன.
வருகின்ற நாட்களில் கார்த்தியின் சர்தார் திரைப்படம் இன்னும் சில கோடிகளை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் படக்குழுவும் சரி, நடிகர் கார்த்தியும் சரிசெம்ம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு கார்த்திக்கு இந்த படம் நல்ல வசூல் வேட்டை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.