தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் கடந்த மாதம் 30 ஆம் தேதி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் வந்தய தேவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவருடைய இந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
அதை தொடர்ந்து இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் சர்தார் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்த நிலையில் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தீபாவளியை முன்னிட்டு சர்தார் திரைப்படம் வெளியானது.
இந்த திரைப்படம் வெளியாகி முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 6.4 கோடி வரை வசூலை செய்தது உலகம் முழுவதும் 9.4 கோடி வரை வசூல் செய்தது. தற்போது சர்தார் திரைப்படம் 34.25 கோடி வரை வசூல் செய்து வெற்றி பெற்றது. 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சர்தார் திரைப்படம் தற்போது 34.25 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்து வெற்றி அடைந்ததால் சர்தார் வெற்றி விழா சமீபத்தில் நடந்தது.
இதில் கலந்துகொண்ட பட குழுவினர் அனைவரும் அவரவர் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர் அப்போது இப்படத்தின் இயக்குனரான மித்ரன் அவர்கள் மேலும் ஒரு சுவாரசியமான தகவல் கூறியிருக்கிறார் அதாவது சர்க்கார் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகியுள்ளது என்று அவர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இதனால் அங்கு இருந்த அனைவரும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர். மேலும் சர்தார் 2 படத்தின் வீடியோவையும் பட குழு வெளியிட்டுள்ளது. சர்தார் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் நடிகர் கார்த்தி அவர்களுக்கு இரண்டு கெட்டப்பில் தான் நடிக்க இருக்கிறார் என்று கூறி வந்த நிலையில் 16 கெட்டபடியில் நடித்து அசத்தி இருக்கிறார்.
இதுவே ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆக இருந்தது ஆனால் இயக்குனர் மித்ரன் அவர்கள் வெற்றி விழாவில் இதைப் பற்றி கூறுவார் என்று எதிர்பார்க்காத ரசிகர்களுக்கு இது மிகவும் கொண்டாட்டமாக உள்ளது என்று கூறப்படுகிறது.