தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கார்த்திக் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து வரும் நிலையில் இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த விருமன், பொன்னியின் செல்வன் இந்த இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை பெற்றது.
இந்த இரண்டு திரைப்படங்களை தொடர்ந்து தற்பொழுது இவர் சர்தார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை பிஎஸ் மித்ரன் இயக்க ராசி கண்ணா, ரஷிஷா விஜயன், முரளி ஷர்மா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு லைலா இந்த திரைப்படத்தினை தயாரிப்பதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி தருகிறது.
இவ்வாறு இந்த திரைப்படத்தை மேலும் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் இப்படிப்பட்ட நிலையில் சர்தார் படத்திற்கு போட்டியாக நடிகர் சிவகார்த்திகேயனின் பிரண்ட்ஸ் திரைப்படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது இவ்வாறு இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படங்கலுக்கிடையே கடும் போட்டி நிலவ இருக்கிறது என கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது கார்த்திக் நடித்துள்ள சர்தார் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது கார்த்திக் நடிப்பில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்திற்கு பிறகு சர்தார் திரைப்படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் .மேலும் உலகநாயகன் கமலஹாசன் போல பல கெட்டப்பில் கார்த்திக் வலம் வருவது மேலும் சர்தார் படம் உளவாளிகளை மையமாக வைத்து ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக அமைந்துள்ளது. மேலும் காதல் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் கார்த்திக் தன்னுடைய உயிரை பணயம் வைத்து பல காட்சிகளில் நடித்துள்ளார் எனவே கண்டிப்பாக இந்த படம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதோ கார்த்திக் நடித்துள்ள சர்தார் பட ட்ரெய்லர்.