நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் என்பது நம்ம அனைவருக்கும் தெரிந்த ஒன்று இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தய தேவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அது மட்டுமல்லாமல் இந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதனை அடுத்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில். பொன்னியின் செல்வன் பட குழு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது அதாவது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் விடுமுறை தினத்தில் வெளியாக உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் முடிந்தவுடன் அடுத்ததாக தற்போது கார்த்தி அவர்கள் சர்தார் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தில் பல கெட்டபுகளில் நடித்துள்ள கார்த்தி இந்த படத்தில் ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இந்த படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது அது மட்டுமல்லாமல் ஒரு ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதனை தொடர்ந்து தற்போது சர்தார் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இதில் நடிகர் கார்த்தி பல கெட்டப்பில் தோன்றி வெறித்தனமாக சண்டையிடும் காட்சிகள் பதிவாகியுள்ளது அதுமட்டுமல்லாமல் இந்த ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் சர்கார் திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறது அது மட்டுமல்லாமல் தீபாவளி அன்று நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படமும் வெளியாக உள்ளது இதனால் இந்த இரண்டு படங்களும் ஒன்றுடன் ஒன்று நேரடியாக மோத உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த இரண்டு படத்திற்கும் பலத்தை எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு வருகிறது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் இந்த இரண்டு படத்தில் எந்த படம் வெற்றி அடையும் என்று.