நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் பருத்திவீரன் திரைப்படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே கிராமத்து கதைகளில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பின்னி பெடல் எடுத்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்த கார்த்திக் அடுத்தடுத்த பட வாய்ப்புகளைப் பெற்று நடித்து வந்தார்.
அந்த வகையில் பல சிறப்பான கதைகளை தேர்வு செய்து நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி உள்ளார். தற்போது நடிகர் கார்த்தியின் கையில் விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் போன்ற மூன்று படங்கள் இருக்கின்றன. இதில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் கார்த்தியை தவிர பல முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர் படமும் 500 கோடி பட்ஜெட்டில் பெரிய அளவில் உருவாகியுள்ளதால் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்த படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து பி எஸ் மித்ரன் இயக்கத்தில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவான சர்தார் படம்.
வருகின்ற தீபாவளி அன்று வெளியாகும் என பட குழு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் சர்தார் படம் குறித்து ஒரு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. சர்தார் படத்தை துவங்கும் பொழுது இந்த படத்தின் பட்ஜெட் 40 கோடி என இயக்குனர் பி எஸ் மித்ரன் கூறியுள்ளார். படப்பிடிப்பும் சிறப்பாக எடுக்கப்பட்டு முற்றிலும் முடிவடைந்து வெளிவர காத்திருக்கின்றது.
இந்த நிலையில் தற்போது படத்தின் பட்ஜெட் 11 கோடி அதிகமாகியுள்ளது என அதிரடியாக இயக்குனர் பி எஸ் மித்ரன் கூறியுள்ளார். இதைக் கேட்ட தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் ஷாக் ஆகி மீதி பணத்திற்கு என்ன செய்வது என கவலையில் இருக்கின்றாராம். இதனால் படம் வெளியாகுவதிலும் தாமதமாகுமா என கார்த்தி ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.