சினிமா உலகில் புதுமுக நடிகர்களின் வரவேற்பு அதிகரிப்பு காணப்படுகிறது அந்த வகையில் பிரபல தொழிலதிபர் சரவணன் அருள் “தீ லெஜண்ட்” என்னும் படத்தில் நடித்து அறிமுகப்படுத்திக் கொண்டார். இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஐந்து மொழிகளில் ரிலீசானது. தீ லெஜண்ட் திரைப்படத்தில் சரவணன் அருளுடன் கைகோர்த்து விவேக், ஊர்வசி ரவுதேலா..
பிரபு, சுமன், யோகி பாபு, விஜயகுமார், நாசர், கோவை சரளா, மன்சூர் அலிகான், ராகுல் தேவ், தேவதர்ஷினி, முனிஷ்காந்த், ரோபோ ஷங்கர், தம்பி ராமையா, சிங்கம் புலி, காளி வெங்கட், தீபா ஷங்கர் என பல திரைய பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படம் முழுக்க முழுக்க சக்கரை வியாதி நோயை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பது தான் கதை.
அதில் காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படம் சூப்பராக ஓடியது அண்மையில் கூட HOTSTAR OTT தளத்தில் இந்த படம் வெளிவந்து வெற்றி நடை கண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. என்னை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கவும் அவர் ரெடியாக இருக்கிறாராம்..
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சரவணன் அருளின் சொத்து மதிப்பு குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பல துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் இருக்கின்றன. பல்வேறு இடங்களில் சொகுசு வீடுகள், கார் என இருக்கிறது கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு தனது சொந்த ஊரான திருநெல்வேலியில்..
ஒரு பிரம்மாண்டமான வீட்டையும் சரவணன் அருள் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல தொழிலதிபர் சரவணன் அருளின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 6000 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் சமூக வலைதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.